வாழ்வதற்கு நேரமில்லை

tss
காதல் ஒழுக கவிதை எழுதி
காதில் தேன் சொட்டும்
கீதங்கள் ரசித்து..
உருகி உருகி
வாழ்ந்த காலங்கள் எல்லாம்
காகிதத்தில் எழுதிய
கதையாய் போயின
எனக்குப் பிடித்தவள் நீ
உனக்குப் பிடித்தவன் நான்
என்ற உண்மைகள் இப்போது
பழைய புத்தகமாய்
பரணில் கிடக்கிறது...
அவ்வப்போது ஆசையாய்
நாலு வார்த்தை பேசியே..!
நம் காதலுக்கு நாம்
உயிரூட்டிக் கொண்டிருக்கிறோம்

என்றாலும்
பிழைப்புக்கு மத்தியில்
வாழ்வதற்கு நேரமில்லை
காதலுக்குரிய நேரமெல்லாம்
இப்போது நம்
தலைமுறைகளுக்கான
தேவைகளின் தேடலாகிப் போனது
நீயும் நானும்
அருகருகே இருக்கிறோம்
என்பதே
நமக்குப் போதுமானதாகி விட்டது
- கவிஞர். திருமலை சோமு

0 Comments: