கருணை உள்ளம்


தனிமையில் உக்கார்ந்து நீண்ட நேரம் யோசித்த பிறகு ஒரு முடிவுக்கு வந்த  டேவிட் வேகமக கிளம்பிச்சென்றான்.. காலை நேரப் பரபரப்பு அடங்கி முற்பகல் என்பதால் சாலைகளில் கூட்ட நெரிசல் குறைவாக இருந்தது.. எனவே தன் வாகனத்தை வேகமாக இயக்கிய அவன் அரைமணி நேரத்திற்குள்ளாகவே.. அந்த அணாதை இல்லத்திற்கு வந்து சேர்ந்தான். வணக்கம் மேடம்..
ஒ.. வாங்க டேவிட் சார்.. உங்களுக்காகத்தான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்.. சொல்லுங்க.. என்ன முடிவுச் செய்தீங்க..
இல்ல மேடம் என் மனைவி முடிவ நான் புறக்கணிக்க விரும்பல.. அவளோட சந்தோசம்தான் எனக்கு ரொம்ம்ப முக்கியம்.. அதனால’.
“அதனால.. சொல்லுங்க சார்.. குழந்தைய எங்ககிட்டயே கொடுத்திருங்க..”
“ஓ.கே அது உங்க விருப்பம்.. ஆனா நான் என்ன சொல்லுறேன்ன.. இன்னும் 2 மூன்று நாள் வேண்டும்னா கூட நல்ல யோசிச்சு முடிவு பண்ணுங்க..”
“ இல்ல மேடம் நல்ல யோசிச்சு முடிவு பண்ணிட்டேன்.. இனி யோசிக்க ஒண்ணும் இல்ல.. பவித்ராவ எங்க கூட அனுப்புங்க… நாங்க நல்லா பாத்துக்கோவோம்.”. என்றான் டேவிட்
“ஓ..கே. மிஸ்டர் டேவிட் நாளைக்கு உங்க மனைவியோட வந்து எல்லா ஃபார்மால்டிஸையும்  முடிச்சுட்டு  கூட்டிட்டுப் போங்க.”  என்றார் அந்த காப்பக மேலாளர்.
அங்கிருந்து புறப்பட்ட டேவிட்ட் நேராக அருகில் இருந்த சர்ச் ஒன்றிற்கு சென்று பாதிரியாரை பார்த்து பேசினான்.. 10 நிமிடத்திற்கு மேலாக பேசிய அவர் பின்னர் நீண்ட நேரமேக அந்த ஆலயத்தில் முட்டிப் போட்டு ஜெபம் செய்தான்.. ஃபாதர் அங்கிருந்து வந்து..
“ டேவிட் போதும் வீட்டுக்குப் போப்பா.. கலங்காதே.. கர்த்தர் எப்போதும் உன்னுடனே இருக்கிறார். உன் நல்ல மனதுச்சுக்கு எல்லாம் நல்லபடியாகவே முடியும்”-  என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார். வீட்டுக்கு வந்த டேவிட் முகத்தைப் பார்த்ததுமே.. அவள்.. அவனிடம் “எங்கப் போனீங்க என்ன முடிவு எடுத்தீங்” க என்று கேட்டாள்.. அமைதியான குரலில் “நல்ல முடிவுதான் நாளைக்கு நாம் இரண்டு பேரும் போய் பவித்ராவ கூட்டிட்டு வந்திருவோம்” என்றான்.
பவித்ரா வேறு யாரும் இல்லை.. டேவிட் மனைவியான மரியா தேவியின் தூரத்து உறவுக்காரர்களின் குழந்தை.. கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த குழந்தையின் பெற்றோர் சாலை விபத்தில் பலியானதால் மூன்று வயதான அந்த குழந்தையை கவனிக்க ஆளில்லாமல் நீ நான் என போட்டிப் போட்டு கடைசியில் அந்த சர்ச் ஃபாதர் மூலம் அனாதை இல்லத்தில் சேர்த்து விட்டுள்ளனர். இதை அறிந்த மரியா தேவி அந்த குழந்தையை நாம் வளர்க்க வேண்டும் என கணவர் டேவிட்டிடம் கேட்டுள்ளார்.
“இல்ல மரியா ஏற்கனவே நமக்கு 2 குழந்தைகள் அதப் படிக்க வைக்கவே ரொம்ப கஷ்டப்படுறோம்.. நான் வேற ஆறுமாசமா வேலை இல்லாம இருக்கிறேன் என்று சொன்னதும் கஷ்டம் எல்லாருக்கும் தான் இருக்கு..”
“அது இல்ல மரியா.. இப்ப இருக்கிற நிலையில் மீண்டும் ஒரு குழந்தையை எப்படி வளர்க்க முடியும்”- எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்..
“நமக்கே 3 குழந்தை இருந்தா.. படிக்க வைக்க மாட்டோமா.. எப்படினாலும் பாடுபட்டு படிக்கவைப்போம் தானே.. முதல்ல அந்த குழந்தையோட மனநிலைய யோசிச்சுப் பாருங்க” என மரியா சொன்னதும் அவனுக்கு சரியாகத்தான் பட்டது..
ஆனாலும் மிகுந்த யோசனையில் இருந்தான். இதை காரணமாக வைத்து அவன் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தினசரி சண்டையும் சச்சரவுமாக போனது.. எனவேதான் நீண்ட யோசனைக்கு பிறகு மனைவியை சந்தோசப்படுத்த அவள் முடிவுக்கு ஒப்புக் கொண்டான்..
மறுநாள் இருவரும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நேராக காப்பகம் சென்று முறைப்படி பவித்ராவை அழைத்து வந்தனர். வரும் வழியில் ஃபாதரை சந்தித்து பேசிவிட்டு அவர் கொடுத்த கொஞ்ச பணத்தை வைத்து அனைவருக்குக்கும் கிறிஸ்துமஸ் புத்த்தாட்டை கேக் எல்லாம் வாங்கி வந்தான்.. பள்ளி சென்று விட்டு திரும்பிய அவன் குழந்தைகளோடு மகிழ்வாக பவித்ரா விளையாடுவதை பார்த்ததும் அவன் கஷ்டம் எல்லாம் எங்க்கோ தொலைந்து போனது போன்று இருந்தது
மனைவியின் கருணை உள்ளம் குழந்தைகளின் மகிழ்ச்சி எல்லாவற்றையும் பார்த்து நெகிழ்ந்திருந்த அவனுக்கு தன் வறுமை பெரிதாக தெரியவில்லை. எதிர்கால பயத்தை தள்ளி வைத்துவிட்டு குழந்ந்தைகளோடு  விளையாடிக் கொண்டிருந்த டேவிட் இடம்
“நாம எல்லோருமே கர்த்தரோட பிள்ளைகள்.. யாரும் அனாதை இல்லை.. இத்தனை நாள் எப்படி கழிந்ததோ அப்படியே நாளைய பொழுதுகளும் போகும் கவலைப் படாமல் இருங்க” என்று அவன் மனைவி சொல்லி முடிக்கவும்.. டேவிட் செல்போனில் ஒரு கால் வந்தது…
ஓகே. சார்.. 
சரி சார்.. அப்படியே செய்றேன். சார்
நோ.. ப்ராபளம் சார்.. நாளைக்கே வந்திட்றேன் சார்..
என்று பேசி முடித்துவிட்டு ஓடிப் போய் மனைவியைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியோடு சொன்னான்.. மரியா.. நம்ம பவித்ரா வந்த நேரம் எனக்கு திரும்பவும் வேல கிடச்சிருச்சு. MNR டெக்னாலஜிஸ் கம்பெனியில. 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் நாளைக்கு ஆப்பிஸ் போய் ஆர்டர் வாங்கிகிட்டு நாளைக்கே டூட்டில ஜாயிண்ட் பண்ணனுமா.. ரொம்ப ஹாப்பி..
மிகவும் சந்தோசமாக பவித்ராவை தூக்கி கொஞ்சிவிட்டு..ஃபாதர பார்த்துச் சொல்லிட்டு வாரேன்.. மரியா.. என்று கூறிவிட்டு சென்றான்
“உன்னிடத்தில் நீ அன்பு கூருவது போல்
பிறரிடத்திலும் அன்புகூருவாயாக.. என்கிற இந்த 
ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம்
முழுவது நிறைவேறும்” - கலாத்தியர் 5:14
என்ற பைபில் வசனத்தைப் படித்துக் கொண்டே.. வீட்டு வேலைகளை செய்தாள் மரியா!

0 Comments: