என் வரமும் நீ என் சாபமும் நீ

என் வரமென்று வந்தவளே
நான் நுகராத வாசனைகள் தந்தவளே…
எத்தனை சந்தோஷம்
எத்தனை கொண்டாட்டம்
எனை சூழ்ந்தாலும்
அத்தனையையும்
உனக்கே சமர்ப்பிக்கிறேன்.
எத்தனை துயரம்
எத்தனை துன்பம்
எனை வீழ்த்தினாலும்
மீண்டும் என்னை
உயிர்ப்பித்துக் கொடுப்பது
கவிதையே
நீ என்ற
என் ஒற்றை வரமே
என் வரமென்று வந்தவளே
நான் நுகராத வாசனைகள் தந்தவளே…
நீயே எனக்கு
சாபமாக மாறினாலும்
நின்னைச் சிந்தித்தே..என்
சுயத்தை இழந்தாலும்..!
நினைவுகளால் சுகமளித்து
நீங்காத இன்பம் தந்து.
கவிதை மொழியில்..
மீண்டும் மீண்டும் வரமென்றே
வந்து சேர்கிறாய்..
கவிதையே….
என் வரமும் நீ
என் சாபமும் நீ
- கவிஞர். திருமலை சோமு

0 Comments: