நூலகம் முதல் இ-நூலகம் வரை


காலமாற்றத்தினால் அறிவியல் முன்னேற்றத்தினால் இன்று எல்லாமும் டிஜிட்டல் மயமாகிவிட்டது.

பேசுவதற்கு என்று பயன்படுத்தி வந்தகையடக்க தொலைபேசியிலேயே உலக விசயங்கள் அனைத்தையும் நாம் இப்போது உள்ளடக்கி வைத்துள்ளோம்அந்த வகையில் டிஜிட்டல்நூலகமும் நம் கைகளுக்குள் வந்துவிட்ட ஒன்றாகும்.
ஒரு மிகப்பெரிய கட்டடத்தில் ஏராளமான அலமாரிகளில் துறைவாரியாக அடுக்கி வைக்கப்படும் மொத்த நூல்களையும் நீங்கள் இப்போது உங்கள்கையடக்க செல்லிடைப் பேசியிலோ அல்லது அதன் வடிவத்திலான ஒன்றில் மென்பொருள் மூலமாக தொகுத்துவிட முடியும் என்றால் அதற்குதொழில்நுட்ப வளர்ச்சியே காரணமாகும்அத்தகைய வளர்ச்சி குறித்து நமக்கு எடுத்துரைக்கிறது டிஜிட்டல் நூலகம் என்ற இந்த நூல்.
இந்நூல் ஆசிரியர் காம்கேர் கேபுவனேஸ்வரி  நூலகம் முதல் -நூலகம் வரை என்ற தலைப்பில் எழுதியுள ஆசிரியர் உரையிலேயே இந்நூலின்பயன் பற்றி நமக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளார்குறிப்பாக நூலகங்கள் உருவான காலம் தொடங்கி -லைப்ரரிகளாக வளர்ந்துள்ள இன்றையகாலக்கட்டத்தையும்எதிர்காலத்தில் நூலகங்கள் எப்படி உருவெடுக்கும் என்பதையும் நூலாசிரியர் இந்நூலில் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துகாட்டியுள்ளார்.
எழுத்து உண்டான கதைநூல் உருவான கதைநூலகம் தோன்றிய கதைநூலக வளர்ச்சி, நூலகம் இயங்கும் விதிமுறை என்பனவற்றை சொல்லிநூல்களின் பயன்பாடு குறித்தும் விளக்கிய நூலாசிரியர் கணிப்பொறி காலத்தில் இணைய வருகைக்குப்பின் அதன் பயன்பாட்டினால் புத்தகங்கள்என்பது எத்தனை இலகுவாக வாசகர்கள் கைக்கு சென்று சேருகிறது என்பதையும் புரியவைக்கிறார்.
அமெரிக்கா 40 ஆண்டுகளுக்கு முன் தனது உள்நாட்டு ராணுவத் தேவைக்கா உருவாக்கிய நெட்வொர்க் சேவை பின்னாளில் அது சூறாவளி வேகத்தில்வளர்ச்சி கண்டு உலகம் முழுவதும் உள்ள கம்யூட்டர்களுக்கு நுழைந்ததால்.. இன்று உலகமே தனிமனிதனின் சட்டைப் பைக்குள் சுருங்கி விட்டதுஎன்றாலும் மிகையில்லைஇந்த இண்டெர் நெட் பயன்பாடு மட்டுமல்லாமல்இண்டெர் நெட்டில் தகவல்களின் பயணம்நூலகமும் இண்டெர்நெட்டும் என பல்வேறு விசயங்களை அலசி ஆய்ந்து எளிய தமிழில் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலில் சொல்லப்பட்டிருப்பதேஇந்நூலின் சிறப்புமேலும் இந்நூலில் அன்று ஒரு நூலகர் செய்து வந்த கடினமான பணியை இன்றைய இண்டெர் நெட் காலத்தில் சர்ச் இன்ஜின்என்று சொல்லப்படும் இணையத்தில் தேடும் மென்பொருள் ஒரு வாசகனுக்கு எவ்வாறு சேவையாற்றுகிறது எனபதையும் நூலாசிரியர்விளக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லமல் இண்டெர் நெட்டில் தமிழை கையாளும் முறைஇணையதில் கிடைக்கும் தகவல்களின் தன்மை மெயில் பயன்பாடுவெளியீடு வர்த்தகம் என பல விசயங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் வாசகர்களுக்கு சொல்லி இருக்கிறார்
இணைய செய்திதாள்கள் அதன் பயன்பாடு எவ்வாறு அது வாசகர்களை இலகுவாக சென்று சேர்கிறது என்பதையும் இணையத்தில் எப்படி புத்தகம்வெளியிடவேண்டும்அதை வாசர்களிடம் எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்பதையும் டிஜிட்டல் நூலகம் என்ற இந்த நூல் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடிகிறதுடிஜிட்டல் நூலகத்தில் நாம் இப்போது ஒரு நூலை எழுத்துக்களாக மட்டுமல்லாமல் காணொலியாக காண்பதோடுஒலிவடிவில்கேட்டு மகிழவும் முடிகிறது.
இண்டெர் நெட்டில் எண்ணில் அடங்கா தகவகள் கொட்டி கிடந்தாலும்பாலையும் தண்ணீரையும் பிரித்தெடுக்கும் அன்னப்பறவைப் போல் தனக்குதேவையா நல்லவற்றை இண்டெர் நெட்டில் தேர்தெடுத்து படிக்க வேண்டிய பொறுப்பு வாசகரையேச் சாரும் என நூலாசிரியார் உணர்த்துகிறார்.

0 Comments: