ஒவ்வொரு நாளும் காலையில் நாம் எழும் போது ஒரு ரம்மியமான இசை, மற்றும் பறவைகளின் மென்மையான ஒலி காதுகளில் ஒலிக்க, சந்தோசமான மன நிலையோடுதான் விடியலை சந்திக்க வேண்டும் என்று விரும்புவதோடு மட்டும் அல்லாமல், நிதானமாக திட்டமிட்டபடி நாம் நமது பணிகளை செய்து இனிமையான உணர்வுகளோடு, பொழுதுகளை கடத்தி அந்த நாளை கடந்து விட வேண்டும் எனறே நாம் பெரும்பாலும் எண்ணுகிறோம்.
ஆனால் பெரும்பாலான நாட்கள் காலையில் தாமதாமாக எழுந்து ஹரிபரியாக கிளம்பி வேகவேகமாக சென்று அலுவலகத்தை அடைந்து திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் அந்த நாளை ஒரு மோசமான நாளாக நாம் உணரும்படியக செய்துவிடுகிறது. அனைவருக்கும் இதுபோன்ற ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கும். அது உங்கள் தவறு போல உணரலாம், ஆனால் அது இல்லை. பெரும்பாலான நேரம், உங்களின் இறுக்கமான சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளன. என்றாலும் உங்கள் செயல்களை கண்காணிப்பதன் மூலம் மோசமான விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்..
உங்கள் மோசமான நாளின் மோசமான விளைவுகளில் இருந்து தப்பிக்க சில குறிப்புகள்
வேலை தொடர்பான மன அழுத்தத்தை அகற்றவும்
மன அழுத்தம் என்பது நம்மை திறமையற்று முடங்கி கிடக்கச் செய்துவிடும். எனவே மன அழுத்தத்தில் இருந்து வெளிவந்து உங்கள் நம்பிக்கையை மீண்டும் பெற ஓய்ந்து கிடக்காமல் சின்ன சின்ன செயல்களின் இருந்து தொடங்குகள். புதிய இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். பணிச்சுமை அதிகமாக இருக்குமானால் அதை குறைப்பதாற்காக நிர்வாகத்துடன் பேசுங்கள். இன்றைய சூழலில் 65 சதவிகித அமெரிக்கர்கள் வேலை தொடர்பான மன அழுத்தத்தை அனுபவிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
அதிகாரிகளுடன் பேசுங்கள்:
எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் உங்கள் அதிகாரியுடன் நேரடியாக பேசுங்கள். எப்படி பேச வேண்டும் என்பது குறித்து முன்பாக மனதுக்குள் பயிற்சி செய்யுங்கள். உங்கள் தனித்துவத்தையும் பாணியையும் எந்த நிலையிலும் மாற்றாதீர்கள். ஏனெனில் உங்கள் பாணி உங்களுக்கு தனிப்பட்ட பலத்தை தருகிறது, மற்றவர் போல் நீங்கள் பேசினால் அது இரண்டாம் தர கருத்தாகவே போய்ச் சேரும். மோசமான சூழல் மோசமான நாட்களை விட்டு வெளியே வாருங்கள் யாருக்குத்தான் அப்படியான அனுபவம் இல்லாமல் இருக்கும். உங்கள் எண்ணங்களை சுருக்கமாகவும் நேராகவும், தெரியப்படுத்துங்கள். விரிவாக சொல்ல வேண்டும் எனில் மின்னஞ்சலில் அவர்களுக்கு தெளிவுப்படுத்தலாம்.
சக ஊழியர்களின் அலுவலக அரசியலை தவிர்த்து விடுங்கள்
சக ஊழியர்களின் நடிப்பு, மற்றும் தேவையற்ற அலுவலக அரசியல் உங்கள் பணித் திறனை பாதிக்கும் எனவே இதுகுறித்து உங்கள் அதிகாரியிடம் பேசுங்கள். இல்லையென்றால் அந்த சூழலில் இருந்து நீங்கள் விலகி இருங்கள். உங்கள் நேரம் வரும் வரை காத்திருங்கள். எந்த சூழலிலும் ஆத்திரப்படவோ அவசரப்படவோ வேண்டாம். சக ஊழியர்களின் அரசியல் கிசு கிசுக்களில் கலந்துகொள்ளாமல் தனித்து இருங்கள். உங்கள் பணிகளில் மட்டும் முழு கவனத்தை செலுத்துங்கள். எதிர்மறை நடத்தை அவர்கள் வேலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி உங்கள் சக பணியாளரிடம் பேச முயற்சி செய்யுங்கள்.
சொந்த பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்
தனிப்பட்ட வாழ்க்கையின் பிரச்னைகள் மற்றும் அலுவலக பிரச்னைகள் இரண்டையும் சேர்ந்து குழப்பிக் கொள்ளக் கூட்டாது. இரண்டையும் தனித்தனியாக கையாள தெரியவேண்டும். மனச்சுமை அதிகமாக இருந்தால் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அதனால் உங்கள் கடமைகளில் பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளும். தனிப்பட்ட வாழ்வின் பிர்சனை அலுவலக பணியை பாதிக்காமல் இருக்கும்வரை தான் உங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு திறம்பட பணியாற்றி உங்கள் நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் நலம் குறைந்தால் மனச்சோர்வு தானாக வந்துவிடும். அது வேலையை நம்மை கவனம் செலுத்தவிடாமல் இடையூறு செய்யும். லேசான தலைவலி ஆனாலும் கூட நாம் உடனடியாக சரி செய்துகொள்ள வேண்டும். சரியான முறையில் தூக்கம் ஓய்வு போன்றவை மனதுக்கும் உடல் நலத்துக்கும் தேவையான ஒன்றாகும். நீங்கள் உடல் நலக் குறைவாக உணரும் போது அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்லது.
நினைவில் கொள்ளுங்கள் ஒரு மோசமான நாளின் பெரும்பாலான சூழ்நிலைகள் உங்கள் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருக்கின்றன. மோசமான நாள் என்பதில் இருந்து மீண்டுவருவதில் கவனம் செலுத்துங்கள். அடுத்த நொடி என்பது புதியது. அது உங்களுக்கானது. இப்போதே கையில் எடுங்கள் புத்துணர்வோடு புதுப் பொலிவோடு புறப்படுங்கள். வெற்றி நமதே..!
0 Comments:
Post a Comment