மாற்றம் என்பது ஒன்றுதான் மாறாதது என்று சொல்வது போல் நாம் நமது வாழ்வில் மாற்றத்தை தேடியே பயணித்துக் கொண்டிருப்போம். மாறத்திற்கான அடிபடைத் தத்துவம் என்னவெறால் நம்பிக்கை ஒன்றுதான்.
நம்பிக்கையோடு இருக்கின்ற போது வருகின்ற எந்தமாற்றத்தையும் நாம் தயங்காமல் ஏற்றுக் கொள்வோம். நம்முடைய வாழ்வின்மாற்றங்களுக்கு நாமே பொறுப்பு. நீங்கள் உண்மையிலேயே மாற்றங்களை விரும்பினால், விரும்பியபடியே உங்கள் வாழ்வை மாற்றிக்கொள்ளலாம். அதற்கான சில யோசனைகள் இதோ: -
சிந்தனையில் மாற்றம்
எண்ணம் போல் வாழ்வு என்பது முன்னோர்கள் வாக்கு. அதன்படி நாம் நம்முடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் தெளிவாகவைத்துக் கொள்ள வேண்டும். சிந்தனையின் மையப் புள்ளியில் தான் மற்றம் தொடங்குகிறது.
நீண்ட காலமாக நம்பிக்கையோடு எதைப்பற்றி நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்களோ அது உங்கள் கைவசமாகும் காலம் வந்தேதீரும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குள் தோன்றுவதோடு, அதை எப்படியும் வாங்கியே தீருவேன் என்று நம்பிக்கையும்இருந்தால் அதை வாங்கிவிடுவீர்கள்.
எதிர்பார்ப்புகளில் மாற்றம்
எதையும் என்னால் செய்ய முடியும் என்பது நம்பிக்கை. என்னால் இதை சாதிக்க முடியும் என்று நம் உள்ளுணர்வு எதைச் சொல்கிறதோ. அதைகையில் எடுத்து கொள்ளகிறோம். பெரும்பாலும் அதையே நாம் செய்ய முயலும் போது நம்மால் சாதிக்க முடிகிறது. எனவே நம்பிக்கை தான் நமதுசக்தியாகிறது.
வாய்ப்புகளை நாம் முழுமையாக நம்பிக்கையோடு பயன்படுத்த தொடங்கும் பொழுதுதான் சாதனைகளை புரிய முடியும். ஆகவே உங்கள்வாழ்வின் மாற்றத்தை ஏறபடுத்தக் கூடிய வாய்ப்புகளை எதிர்பார்த்திருங்கள். வரும் வாய்ப்புகளை நம்பிக்கையோடு பயன்படுத்துங்கள்.
மனப்போக்கை மாற்றுங்கள்
உங்கள் எதிர்பாரப்புகள் உங்கள் அணுகுமுறையை மாற்றும் வல்லமை கொண்டவை. வெற்றியை நோக்கி அடியெடுத்து வைக்கமுதல்படியாக இருப்பது எதிர்பார்ப்புதான்..எந்த ஒரு விசயத்தையும் நாம் எதிர்பார்த்து முனைப்போடு செய்யும் போது அது நமக்கான முழுபலனையும் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
நடவடிக்கையில் மாற்றம்
எண்ணங்கள் மாறும் போதும் செயல்களும் மாறும். ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் தீவிரம் அடைந்துவிட்டால்அதற்கான செயல் முறைகளை நாமே தொடங்கி விடுவோம். தனிப்பட்ட முறையில் நம்மை நாம் மாற்றிக் கொள்ளும் போதுதான் நம்மைசார்ந்தவர்களை நமக்கான பாதையில் அழைத்துச் செல்ல முடியும். மாற்றங்களை செய்ய விரும்பினால் அந்த மாற்றத்தை முதலில் உங்களிடம்இருந்து தொடங்குகள்.
செயல் திறனில் மாற்றம்
நம்மில் பலர் தங்கள் பிரச்னைகளுக்கு சரியான தீர்வு எது என்பதை விட நமக்கு செளகரியாமனது எது என்பதை பார்த்து தேர்வு செய்துகொண்டுஅந்த பிரச்னைகளுடனே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சில மாற்றங்கள் நமக்கு நல்லதாக இருக்கும் என்று நாம் அறிந்தாலும் கூட அந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல், தற்போது இருக்குசெளகரியத்தை இழக்க விரும்புவதில்லை. மாற்றங்களை தைரியத்தோடு ஏற்றுக் கொண்டு, செயல் திறனை கூட்டிக் கொண்டு, வசதியாக இல்லாதஏதோவொன்றைப் பழகிக்கொள்ளும் வரை, நாம் எந்தவொரு சிறப்பையும் பெற முடியாது.
வாழ்கையில் மாற்றம்
நாம் நமது செயல்திறனை மாற்றும் போது நம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. ஒரு வாய்ப்பை தவற விடும் அந்த நேரத்திலேயே நாம்நமக்கான வெற்றியை இழக்கிறோம். ஒரு விசயத்தில் தோல்வி அடைந்தால் அந்த தோல்விக்கான முழுகாரணங்களையும் புரிந்து கொள்ளுங்கள். அதுவே வெற்றியை உருவாக்க வழிவகுக்கும். என்றாலும் எல்லாவற்றிற்கும் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டு இருக்கும் ஒருநபரால்ஒருபோதும் வெற்றிபெற முடியாது.
என்னால் இது முடியாது, எனக்கு தெரியாது, நேரம் இல்லை. என காரணங்களை தேடி கண்டுபிடித்து ஒரு விசயத்தை செய்யாமல் இருக்கும்எவரும் வாழ்க்கையில் எந்த ஒரு மாற்றத்தை காண முடியாது. அவருக்கு வெற்றி, சாதனை என்பதும் கூட வெகுதூரத்தில் நிற்பதோடுசாத்தியமற்றதாகவே போய்விடும். எனவே நம்பிக்கையோடு எதையும் எதிர்கொண்டு.. வெற்றியோடு கைகோர்ப்போம்.. வாழ்வை மாற்றிஅமைப்போம்...!
- திருமலை சோமு
தினமணி இளைஞர் மணிக்காக எழுதியது
தினமணி இளைஞர் மணிக்காக எழுதியது
0 Comments:
Post a Comment