பட்டாசு பூமியும் மத்தாப்பு வானமும்

சுத்தும் பூமியில்..
சுகங்கள் ஆயிரம் தேடி
படபடக்கும் மனதோடு.
நாளும் ஓடித் திரியும் மனிதனுக்கு
நாளாம் திருநாளாம்.


தீபாவளி எனும் ஒரு நாளாம்..
தீபங்கள் ஏற்றி இருள்தனை அகற்ற
தீமைகள் எல்லாம் அழிந்தது என்றே
திசைகள் எட்டும் கொட்டும் முரசென
பட்டாசு வெடித்தான்..
சந்தோசம் பொங்க.. பலவகை பட்சனம் செய்தே
புத்தாடையோடு குதூகலாமாய்
கொண்டாடி மகிழ்ந்தான்..!

நாளாம் திருநாளாம். - இது
தீபாவளி எனும் ஒரு நாளாம்..
அன்றாடம் அல்லல் படும் வாழ்கையில
கொண்டாடும் ஒருநாளாக
கூடியே மகிழ்ந்தான்..
மனிதன் அவன் மகிழ்ச்சியை எட்டிப் பார்த்து
பூரிக்கும் வானமாய்..
சிரித்து கிடக்குது மத்தாப்பு வானமும்..

மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி என்று
படபடக்குது பட்டாசு பூமியும்..1

0 Comments: