எதிரிகளை நேசிக்க 8 சிறந்த வழிகள்..

சில நேரங்களில் நம் கருத்துக்களோடு முரண்பட்டு நிற்பவர்கள் நமக்கு எதிரிகளாக உருவெடுத்து விடுவதுண்டுஆனால் சில நேரங்களில் எந்த காரணமும் இன்றி நம்மோடு சிலர் வெறுப்புணர்ச்சியைகாட்டுவதும் உண்டு.

மனிதனை மனிதன் நேசிப்பதும் மனித நேயத்தை வளர்ப்பதும் தான் நம் பண்பாக இருக்க வேண்டும் என எத்தனையோ அறிஞர்களும் ஆன்மிக போதனைகளும் நமக்குப் பாடம் சொன்னாலும் பல்வேறுகாரணங்களால் பல நேரங்களில் நம்மால் நம் உடன் பிறந்தவர் முதல் சகப்பணியாளர்கள் அண்டை வீட்டார் என பலரிடமும் வெறுப்புணர்வை காட்டத் தொடங்கி விடுகிறோம் அதுவே நாளடைவில்அவர்களை நமக்கான எதிரியாக ஆக்கியும் விடுகிறதுஅவ்வாறு இல்லாமல் நம் எதிர்களையும் நாம் நேசிக்க சில ஆலோசனைகள் உங்களுக்காக...!
1. கோபத்தை கட்டுப்படுத்துங்கள்
கோபம் தான் நமக்கான முதல் எதிரி என்று சொல்ல வேண்டும்அந்த கோபத்தை கட்டுப்படுத்தும் வழி தெரிந்துக் கொண்டால் எதிரிகளை இலகுவாக அடக்கி விட முடியும்கோபத்தை நீங்கள்கட்டவிழ்த்து விடுவீர்கள் ஆனால் உங்கள் எதிரியும் மிக மோசமாக பலமடங்கு எழுந்து நிறக்க கூடும்.  உண்மையில் நம் எதிரிகள்தான் நமக்கான பயிற்சியை அளிக்கிறார்கள் நம்மிடம் இருக்கும்கோபத்தின் உந்துதலைக் கட்டுப்படுத்த அவர்கள் ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் என்று எடுத்துக் கொண்டு கோபத்தை கட்டுப்படுத்த பழகுங்கள்.
2. ஆரோக்கியமான போட்டி
நாம் நமது எதிரிகளால்தான் போட்டியில் பங்கேற்கவும்போட்டியிடவும் சரியான ஊக்கத்தை பெறுகிறோம்நாம் நமது வெற்றிக்கு நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும் அந்தநேரத்தில் ஒரு எதிரிக்கு எதிராக செயல்படுவது என்பது தந்திரமான ஒன்றுஅதேநேரத்தில் நீங்களோ அல்லது உங்கள் ஒழுக்கங்களுக்கோ தீங்கு விளைவிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்எந்த சூழ்நிலையிலும் நேர்மையாக ஆரோக்கியமான போட்டியை மட்டுமே எதிர்கொள்ள வேண்டும்.
3. எதிர்மறை கருத்துக்களை வரவேற்போம்
நம் எதிர்கள் ஒருபோதும் நம்மைப் பற்றி நல்லவிதமாக சொல்லப்போவதில்லை என்பது உண்மையிலும் உண்மைஎனினும் அவர்கள் சொல்லும் விசயங்களில் சில உண்மைகளும் இருக்க கூடும்என்பதை நினைவில் கொள்ளுங்கள்ஒரு எதிரியிடம் இருந்து வெளிப்படும் கருத்துக்களை கேட்கும் போதெல்லாம் நாம் நம்மை ஒரு முறை சுய மதிப்பீடு செய்து கொள்வது நல்லதுஅது உங்களைநீங்கள் சிறந்த மனிதனாக மாற்றிக் கொள்ள உதவும்.
4. எதிரிகள் சக்தி வாய்ந்த கூட்டாளிகளாகவும் இருக்க முடியும்
நாம் நமது எதிரியிடம் உள்ள நல்லப் பக்கங்களை கவனித்துஅவருடன் சமாதனமான போக்கை கடைபிடித்து அவரை நேசிக்க தொடங்கினால்அவரை நாம் நல்ல நண்பராகவும் ஆக்கிக் கொள்ளமுடியும்.  மற்றவர்களுடன் இணக்கமாக பழகு முறையோடு நாம் நமது தனிப்பட்ட திறனை வளர்த்துக் கொண்டால்எவ்வளவு பெரிய எதிரியையும் சமாளித்து எளிதில் வெற்றி பெற முடியும்.
5. நேர்மறை உணர்வை வளர்த்தல்
நம்மைச் சுற்றியோ அல்லது நமக்குள்ளோ ஏராளமான எதிர்மறை விசயங்கள் இருக்குமானால் ஒரு நேர்மறை புள்ளியைக் கண்டறிந்து அதன் வழியில் தொடரலாம்சில நேரங்களில் உங்களிடம்உள்ள நேர்மறையான சிந்தனை மற்றும் நல்ல குணங்களை கண்டு உங்கள் எதிர்கள் கூட உங்களுக்கு உதவலாம்எதிரியை கருத்தில் கொண்டு பல நேரங்களில் வாழ்க்கையில் எத்தனையோமுக்கியமான விசயங்களை புறக்கணித்திருப்போம்அதுபோல் இல்லாமல் நல்ல விசயங்களை நல்ல மனிதர்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
6. தவறான புரிதலை சரி செய்வோம்
சில நேரங்களில் நாம் நம் நட்பு மற்றும் உறவில் ஏற்பட்ட விரிசலுக்கான காரணத்தை அறிந்திருக்க மாட்டோம்ஒருவேளை தவறான புரிதல் கூட அந்த விரிசலுக்கான காரணமாக இருக்கலாம்அந்தகாரணத்தை புரிந்து கொண்டால் சின்ன அணுகுமுறை மூலம் உங்கள் உறவை சரிசெய்து கொண்டு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
7பாராட்ட கற்றுக் கொள்வோம்
நாம் நமது எதிரிகளை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நம்மை நேசிப்பவர்களை கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லைஅன்பும் வெறுப்பும் இருவேறு உணர்ச்சிகள்ஒன்றை நாம்நினைத்தால் மற்றொன்று தானாக மறைந்து விடும்எல்லா இடங்களிலும் எதிரிகள் இருப்பதாக எண்ண வேண்டாம்எதிரிகள் இருக்கும் இடங்களில்தான் நம்மை நேசிப்பவர்களும் இருக்கிறார்கள்.எனவே எதிரிகளை பற்றிய சிந்தனையை விடுத்து எப்போதும் நம்மை நேசிக்கும் மக்களை பற்றிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்அவர்கள் உங்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பதைதேடி கண்டு உணர்ந்து அவர்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள்எதிரிகள் என்ன கெடுதல் செய்தாலும் அதைக் கண்டு  கவலை கொள்ளாதீர்கள்.
8. உண்மையில் நீங்கள் வெறுக்கிறீர்களா..?
உண்மையில் எதிரிகள் நம்மை கோபப்படுத்தி நம் வெறுப்புணர்ச்சியை தூண்டிப்பார்க்கவே விரும்புவார்கள்நீங்கள் அமைதியான சூழலை விரும்பினால் எதிரிகளை பற்றி கவலைப் படாமல்உங்கள் வேலையை செய்யுங்கள்வெறுப்பு என்பது மிக மோசமானதுஅதை தூக்கி எறிந்து விட்டு உணர்ச்சிவசப்படாமல் இயல்பாக இருக்கப் பழகுங்கள்.

0 Comments: