முடிவில் ஏதோ ஒன்று...

ஜாதிமதம் பாகுபாடின்றி
எழை பணக்காரன்
வித்தியாசம் இல்லாமல்
நாலும் அறிந்தவன்
அறியாதவன்..
என்பது கூட பார்காமல்..
சக தோழனாய் பழகினாலும்
முடிவில் ஏதோ ஒன்று
எண்ணில் இருந்து
வேறுபடுத்தி விடுகிறது..
சமமாய் எண்ணிய என்னை
காயப்படுத்திவிட்டு..
அப்போதுதான் உணர்கிறேன்
எனக்கு நிகர் என்று யாரும் இல்லை
யாருக்கும் நிகராய் நான் இல்லை என்பது..!

0 Comments: