இதயமெனும் பொற்கோயில்


யாரோ வந்து போனதற்கு
அடையாளமாய்
அந்த ஈரமணலில்
பதிந்திருந்தது...
இரண்டு கால் தடங்கள்
நடந்து சென்றவர்கள்
விரும்பி பதித்ததில்லை
என்றாலும் இந்த கால்தடங்களை
உள் வாங்கி கொண்டது
ஈரமணலின் இயல்பு
இப்படித்தான் என் இதயமும்..!
என்றாலும்.. எனை அறியாமல்
எனக்குள் வந்து தடம் பதித்து
சென்ற உனக்கு ஒன்றை
சொல்கிறேன்..!
கண்டவர் எல்லாம் தடம் பதிக்க
என் இதயம் ஒன்றும் ஈரமண் இல்லை
உனக்காக எழுப்ப பட்ட பொற்கோயில்

0 Comments: