எதிர்கால கனவு

எல்லோருக்குள்ளும் இருக்கும்
விதவிதமான எதிர்கால கனவு..
ஒரு விவசாயி மகனான
எனக்குள்..
விலை போகாமல் எங்கள்
விளைநிலம்..மகசூல் மட்டுமே
தந்து கொண்டிருக்க வேண்டும்
எல்லா காலத்திலும்..
ஊருக்கே உணவளித்து..
உறவுகள் பேண வேண்டும்..
பசுமை மாறா பூமி..
பாரினில் எங்கும் வேண்டும்..!

0 Comments: