என் பாதையும் என் பயணமும்

இலக்கு நோக்கிய
என் பயணத்தில்
பாதை தெரியாமல்..
பலநாட்கள்..

இடறி விழுந்து
தடம் மாறி
சில நாட்கள்..

முட்டி முளைக்கின்ற போதெல்லாம்
கிள்ளி எறிகின்ற விரல்கள்..

எங்கே தொலைந்து போவேனோ
என்ற அச்சத்திலேயே..
போராடி போராடி
புதிய பாதை தேடி-மீண்டும்
இலக்கு நோக்கிய பயணம்..

பாதையும் முடியவில்லை
பயணமும் முடியவில்லை
களைப்பினூடே திரும்பிபார்க்கிறபோதுதான்
உணர்கிறேன்..
வாழ்வில் பாதி முடிந்திருப்பதை

மீதி வாழ்க்கையை
எப்படி வாழ்வது...
மீண்டும் தொடர்கிறது
என் பயணம்..
அதற்கான இலக்கோடு!

0 Comments: