அஹிம்சை

அஹிம்சை
இந்தியாவின் தேசிய சொல்
ஆங்காங்கே சில
எதிர்ப்பதங்களும் உண்டு

இருப்பினும் - இது
எதிரிகளை ஆயுதம் இன்றி வீழ்த்தும்
வலிமை கொண்ட கூர்ச் சொல்

இந்த ஒற்றைச் சொல்லெடுத்து
காலனி ஆதிக்கத்தை
காலடியில் வீழ்த்தியவர்
அண்ணல் காந்தி..!

தேசப் பிதாவாய்
மகாத்மாவாய்
மானுடம் போற்றும்
ஓர் உயிராய் இன்றும் வாழும்
அன்னல் காந்தியின் கைத்தடியில்
காலூன்றி நின்ற அஹிம்சை

ஆங்கிலேய ஆதிக்கத்தை
காலிடறி விழச்செய்ததோடு
அகிலம் எங்கும்
ஆனந்த ஜோதியாய்

எழுந்து நிற்கிறது..!

0 Comments: