பட்டுப்புழு வளர்ப்பு - முனைவர் பி.மாரியப்பன்,

பட்டுப்புழு வளர்ப்பு - முனைவர் பி.மாரியப்பன், பக்.264; ரூ.200 இயல் வெளியீடு, 23 பி/2739, தொப்புள் பிள்ளையார் கோவில் தெரு, தெற்கலங்கம், தஞ்சாவூர் - 01

பட்டாடையை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் பெண்களுக்கு பட்டுப் புடவை என்றால் கொள்ளைப் பிரியம்தான் என்றே சொல்ல வேண்டும். சீனாவை தாயகமாக கொண்ட பெருமை மிகு பட்டு தோன்றிய வரலாறை எடுத்துச் சொல்வதோடு, பட்டு நூலின் உற்பத்தி குறித்தும் பட்டின் பல்வேறு வகைகள் பற்றியும் பேசும் நூல்தான், பட்டுப்புழு வளர்ப்பு, 

பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் ஆர்வமுடைவர்கள் அனைவரும் பயன்பெரும் வகையில் பல்வேறு தகவல்களை இந்நூலில் ஒருங்கே தொகுத்து அளித்திருக்கிறார். நூல் ஆசிரியர். 25 அத்தியாங்கள் கொண்டுள்ள இந்நூல் பல்வேறு பல்கலைக் கழகங்கங்களின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது இதன் மற்றொரு சிறப்பாகும். 

பட்டுப் புழு வளர்ப்பு குறித்து பயிலும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஆதாரமாக செயல்படக்கூடிய மல்பெரி பற்றியும் அதை பயிரிடும் முறை, தாவரப் பெருக்க முறை, பயிரிடும் காலம் போன்றவற்றையும் குறிப்பிட்டு பட்டுப்புழு வளரிடை சூழல், வெப்பம், ஈரப்பதம், புழுவிற்கு வழங்கப்படும் இலை, பருவப் பட்டுப்புழுவின் உணவுத்தேவை என எல்லாவற்றையும் விரிவாக விளக்கி அறிவியல் பூர்வமாக உதாரணங்களுடன் தொகுத்து தரப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு மட்டுமல்ல பட்டுப்புழுவளர்க்கும் ஆர்வலர்கள் அனைவருக்கும் சிறந்த வழிகாட்டி நூல் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை. 

0 Comments: