சீனாவில் ஜி. 20 நாடுகளின் உச்சி மாநாடு: முதலீட்டு கொள்கை உட்பட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்

சீனாவில் முதன் முறையாக ஜி. 20 நாடுகளின் உச்சி மாநாடு நடக்க உள்ளது. சீனாவின் இயற்கை எழில் நிறைந்த நகருமான ஹாங்சோவில்  நடக்கும் இம்மாநாட்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் தெரசாமே சீன பிரதமர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
உலகத் தலைவர்களின் வருகையை முன்னிட்டு ஹாங்சோ நகரம் முற்றிலுமாக மாறியிருக்கிறது. பூமியில் சொர்க்கம் இருப்பது போல பல மில்லியன் பவுண்டுகள் செலவழித்து புதுப் பொலிவு பெறச் செய்துள்ளனர். இம்மாதம் 4, மற்றும் 5ம் தேதிகளில் நடக்க உள்ள இம்மாநாட்டில் முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை மட்டுமே விவாதிக்காமல் அவற்றையும் தாண்டி உலகம் எதிர்கொள்ளும் ஸ்திரமான வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா விவாதிக்கும். மேலும் சில முக்கிய விஷயங்களை சீனா முன்னெடுத்து் செல்லும் என தெரிகிறது.
ஜி20 மாநாட்டில் 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிறுத்துவார். இந்த இலக்கை எட்டுவதற்கு வர்த்தகமும் முதலீடுகளும் கருவிகளாக செயல்படும் என கூறப்படுகிறது. சீனாவில் உள்ள, ஷாங்காயில் நடக்கும் இம்மாநாடு சீனாவின் தலைமையில் நடைபெற உள்ளது. 

இதில் வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் கலந்துகொள்கின்றன. சூழல் பாதிப்பில்லாத எரிசக்தியைப் பெறுவது ஜி20 மாநாட்டில் பிரதானமாக இடம்பெறும் என்றாலும் கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பாக உறுப்பு நாடுகள் தகவல்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.  மேலும் இந்திய சீன கூட்டு ஒத்துழைப்பு, நல்லுறவை பேணுதல், போன்றவற்றிலும் கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஸென் யுவான்யாங் எனும் 45 வயது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர், மாநாடு குறித்து, பேசும் போது ஹாங்சோ நகரம் தற்போது முழுவதும் மாறிவிட்டது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். சீன நாட்டின் வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷென் டான்யாங் இம்மாநாடு குறித்து கூறும் போது வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை உட்பட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இம்மாநாட்டுக்கு பின் சர்வதேச அளவில் ஜி.20 அமைப்பின் தகுதி நிலை உயரும் என நம்பிக்கை தெரிவித்தார். 

ஜி.20 உச்சி மாநாட்டின் சின்னம் சீன முத்திரையுடன் ஜி-20 2016 சீனா என்று எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சின்னத்த்தில் ஜி.20 நாடுகளின் உறவுப் பாலத்தை குறியீடாக காட்டுவது போல் 20 கோடுகள் கொண்டு பால போன்ற படம் வரையப்பட்டுள்ளது. ஜி-20 மாநாட்டின் பொருளாதாரம் சார்ந்த கூட்டம் நடக்கவிருக்கும் காரணத்தால், சீனமக்களுக்கான மேம்பாட்டு வளர்ச்சிகளிலும் அநாட்டு அரசு கவனம் செலுத்தியுள்ளது. மாநாடு நடைபெற உள்ள இடங்களைச் சுற்றி பாதுகாப்பு வளையங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
இந்த ஜி. 20 மாநாடின் மூலம் சர்வதேச சமூகத்தோடு சீன வலுவான உறவை பேணவும் சரவதேச வளர்ச்சிக்கு பரஸ்பர ஒத்துழைப்பை நேர்மையுடன் வழங்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் நடக்க உள்ள ஜி. 20 மாநாடு அங்குள்ள மக்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  மாநாடு நடக்கும் ஹாங்சோவில் 9 மில்லியன் மக்கள் வசிப்பதாகவும்,
1 மில்லியன் உள்ளூர் வாசிகள், கடந்த டிசம்பரில் இருந்து பாதுகாப்பு மற்றும் விளம்பரம் தொடர்பான பணிகளில் தாமாக முன்வந்தது செயலாற்றியுள்ளனர். என்றும் நான்காயிரத்திற்கும் அதிக மாணவர்கள் வாரம் முழுவதும் ஜி 20 தொடர்பான நிகழ்வுகளிலில் தன்னார்வலர்கள்ளாக தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த ஜி.20 உச்சி மாநாடுகள்
2008ம் ஆண்டு வாஷிங்டனிலும், 2009ல் லண்டனிலும், 2010ம் ஆண்டில் டொரண்டோவிலும், 2010ம் ஆண்டிலும், சியோலிலும், 2011ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரிலும், 2012ம் ஆண்டில் மெக்ஸி
கோவின் லாஸ் கேபாசிலும், நடந்தது. 2013ம் ஆண்டில் ரஷ்யாவின் பீட்டர்ஸ் பர்க் நகரிலும், 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும், 2015ம் ஆண்டு துருக்கி அன்டால்யா நகரில் நடந்தது. தற்போது முதன் முறையாக சீனாவில் நடைபெற உள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த மாநாட்டில் உலகளாவிய வளர்ச்சி,  வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்கள் முதன்மை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டன. வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் உறுப்பு நாடுகளுக்குள் குறைந்தது 2 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவது குறித்து ஆராயப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments: