புத்தகம் என்பது.. வெறும் பொழுதுபோக்குக்கான விசயமாக மட்டும் இருப்பதில்லை. புத்தகத்தை வாசிக்க வாசிக்க சிந்தனை பெருகுவதோடு, செயல்களும் தெளிவடைகின்றன. எனவே வளரவேண்டும், வாழ்வில் ஒரு உன்னத நிலையை எட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்ட அனைவரும், தங்கள் துறைசார்ந்த புத்தக வாசிப்பை தொடர்ந்து மேற்கொண்டால் நிச்சயம் வெற்றிப் பாதை அடையலாம் என்பதில் ஐயம் இல்லை. புத்தகத்திற்கு நூல் என்று ஏன் பெயர்வந்தது என்பது குறித்து வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் கூறும் போது, கிழிந்த ஆடைகளை தைக்கும் நூல் போல் மனங்களை தைத்து ஒழுங்குப்படுத்து பண்புடையது என்பதால் புத்தகத்திற்கு நூல் என்று பெயர் வந்தது என கூறுவார்.
வாசிப்பின் நோக்கம்
புத்தகங்களை படிக்கப் தொடங்கும் முன், நாம் என்ன முயற்சியில் இருக்கிறோம் என தெரிந்து அதன் தொடர்புடைய புத்தங்களை வாசிப்பது சிறந்தது. நாம் வாசிக்கும் புத்தகங்களின் உள்ளடக்கம் நம் வாழ்க்கையை மாற்றும் என்பது உறுதி எனவே உங்கள் தற்போதைய சவால்களை எப்படி சமாளிப்பது என்பதை உங்களுக்கு கற்பிக்கும் புத்தகங்களை மட்டுமே படிக்கவும்.
நூல் ஒரு சிறந்த ஆசான்
வாசிப்பு என்பது ஒரு பழக்கமாக இருந்தால் அது நமக்கு நல்ல படிப்பினைகளை தருவதோடு நம்மை ஒரு சிறந்த அறிவிற்சிறந்த நபராகவும் ஆகுகிறது. ஒரு வகுப்பறையில் கற்றுக்கொள்ளமுடியாத பல விசயங்களை ஒரு நூல் நமக்கு கற்றுத்தந்துவிடும். அறிவைப் பகிர்ந்து கொள்வது ஒரு பண்பு, அவ்வாறு பகிர்ந்து கொள்ளாவிட்டால் நீங்கள் ஒரு ஆசிரியராக சிறந்த ஆசிரியராக இருக்க முடியாது. ஒரு புத்தகத்தை வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மனநிறைவை தரும் புத்தகம்
புத்தக வாசிப்பு என்பது நமது மூளைக்கும் மனதுக்கும் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. சில புத்தகங்கள் மிகவும் பயனுள்ளது என்று நீங்கள் கருதினால் அதில் இருந்து குறிப்பு எடுத்துக் கொள்ளுதல் அவசியம் ஆகும். மிக முக்கியமான ஒன்றை முன்னிலைப்படுத்தும்போது, அந்த பக்கத்தினை ஒரு படம் எடுத்து அதை டிஜிட்டல் முறையில் பதிவேற்றி வைத்துக் கொள்ளலாம். அது ஏன் முக்கியம் என்பதையும் அதை எப்படி பயன்படுத்துவது என்பதையும் உடனடியாக குறித்து வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்து வைத்துக் கொண்டால் நல்ல புத்தகத்தின் வாசிப்பு மனநிறைவை தருவதோடு நமக்கான முழு பயனையும் தருவதாக இருக்கும்.
கற்பனைகளும் காட்சிப்படுத்துதலும்,
சில புத்தகங்களை வாசிக்கும் போது அது நம்மோடு பேசும், சில விசயங்களை காட்சிப் படுத்தும் நம் கற்பனைகளை விரிவடையச் செய்யும். மேலும் பயனுள்ள ஆலோசனையின் ஒரு பகுதியை வாசிக்கும்போது, உண்மையில் அந்த விஷயத்தைச் செய்யதூண்டும். காட்சிப்படுத்துதல் என்பது ஒரு மிகச் சிறந்த சுய-மேம்பாட்டு கருவியாகும், இது பல வெற்றியாளர்களும் உணர்ந்த விசயம். சமீபத்தில் ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர் போல் பியர்ஸ், ஒரு விளையாட்டிற்கு முன்பு எவ்வாறு இந்த காட்சிப்படுத்துதலை பயன்படுத்தினார் என்பதை விளக்கி இருக்கிறார்.
அமைதி மற்றும் புதிய அறிவை தரும் நூல்கள்
நாம் நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும். எதை நோக்கிய பாதையில் வளர்ச்சியடைய விரும்புகிறோம், தனிப்பட்ட வாழ்க்கை, பொருளாதார ரீதியில். அல்லது ஆன்மிக வழியில் என எந்த வழியில் என்பதை ஆய்ந்து அதற்கேற்ற பாதையை தெரிவு செய்ய வேண்டும். வளர்ச்சி தானே நடக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள். புதிய திறமைகளை கற்றல், அதிக பணத்தை சம்பாதித்து, ஒரு பெரிய உறவைக் கொண்டிருப்பது இவை அனைத்தும் கடின உழைப்பில் மட்டுமே கிடைக்கும். ஆனால் புத்தகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்களை நீங்கள் கடைப்பிடித்தால், அந்த வளர்ச்சியை நீங்கள் எளிதாக செய்யலாம்.
எனவே நல்ல புத்தகங்களைத் தேடி வாசிக்கும் பழக்கத்தை இன்றே தொடங்குவோம், வாசித்தவற்றை நினைவில் கொண்டு வாழப் பழகுவோம். வெற்றி நமதே..!
0 Comments:
Post a Comment