முற்செடிகளாய்.. உன் நினைவு..!


முற்செடிகளாய் முளைத்து 
வெற்றிடங்களை நிரப்பி
என் கனவுகளையும்
நேரங்களையும் 
குத்தி குத்தி ரணமாக்குகிறது
உன் நினைவு..!

ஒதுங்கி செல்லவோ
ஓய்ந்திருக்கவோ தெரியாத
என் மனம் மீண்டும் மீண்டும்
சிக்கிக்கொள்கிறது 
உன் நினைவுகளுக்குள்

எனக்குள் இருந்து நிலை குலைத்து
தினம் வதைத்து  எனை புதைக்கும் 
உன் நினைவு.. பூவனமாய் மலர
வரம் வேண்டும் எனக்கு...

0 Comments: