உனக்கும் எனக்குமான வாழ்க்கை...!

பொய்யொன்று நீ சொல்லும் போது
உன் விழியிரண்டும்
தெளிவுரைக்குதடி

தேனமுத வார்த்தையெல்லாம்
தேவதையுன் எச்சிலில் கரையுதடி

உன் உதடுகளின் உச்சரிப்புக்காய்
உண்மையும் உன்னிடத்தில்
மண்டியிட்டு வேண்டுதடி.

இனியும் ஒரு பொய்
சொல்லலாகுமோ...
நீ சொல்லுகின்ற வார்தையும் தான்
உண்மையாகுமோ..

ஏ.. பெண்ணே..!
கவிஞர்களின் பொய்யில்
கற்பனை இருக்கும்..
கவிநயம் இருக்கும்..
கவர்ந்திழுக்கும்
மொழிநடையும் இருக்கும்..

அத்தோடிணைந்து

நேசம் மிக்க
நெஞ்சத்தின் காதல்
ஒளிந்தே வந்து
உண்மையும் உரைத்திடும்...!

இதோ அப்படித்தான்
கவிபாடும் உன்விழியும்
உண்மையை உரைக்குதடி...

ஒரு நொடியில்...
பொய் ஒன்று சொன்னாலும்..
மறு நடையில் மடை திறக்கும்
உண்மையை மறைத்தலாகுமோ...!

சொல்லி விடு பெண்நிலவே
அந்த ஒற்றைச் சொலில் தான்
ஒளிந்திருக்கிறது..
உனக்கும் எனக்குமான
வாழ்க்கை...!

0 Comments: