முகநூலில் அகம் தேடும்..புற மனிதர்கள்

அண்ணன் தம்பி
அக்காள் தங்கை
அத்தை மாமன்
சித்தப்பன் பெரியப்பன்
என சொந்தங்கள் கூடி
வாழ்ந்த காலங்கள் போயின

இன்று

ஒத்தைக்கு ஒருபிள்ளை
ஓர் அறையில்
ஒரு குடும்பம்
என்றே வாழும்
நமக்குள்

சந்தோஷக் காற்றும்
செயற்கை சுவாசங்களாகின..!

பொழுதெல்லாம் புலம்பவும்
அவ்வப்போது அழுவதற்கும்
அடிக்கடி சிரிப்பதற்கும்

முகநூலில் அகம் தேடும்..
புற மனிதர்களாகி
போயினோம்..!

0 Comments: