தெரிந்தவர்கள் சொல்லுங்கள்


இரத்த சம்பந்தம்
ஏதும் இல்லை
சத்தியமாய்
காதலும் இல்லை
காமமும் இல்லை
நட்பு என்று
மூன்றெழுத்தில்
முடிக்கவும் முடியவில்லை
பலன் பார்த்து
பழகவும் இல்லை
இதயங்கள் இணைத்து
பாசம் மட்டுமே
பரிமாறிக்கொள்ளும்
எங்களுக்குள் என்ன சொந்தம்
சொல்ல தெரியவும் இல்லை
அன்பை போதிக்கும்
உலகத்தாரே
நீங்கள் சொல்லுங்கள்..!

1 Comments: