என்னவளின் விழியில்


உன் ஒளி வெளிச்சத்தில்
இந்த உலகம் எனக்கு
இருளாய்தான் தெரிகிறது

தேய்ந்து தேய்ந்து வளரும்-உன்
தேகம் எனக்கு தெரியாது
முகம் மட்டும் காட்டிச்செல்லும்
முழுமதியே..
என்வாசல் வந்து ஒளி வீசும்
வெண்ணிலவே...
வெளிச்சம் எனக்கு
என்னவளின் விழியில்தான்..
அவசரமாய் மேகம் இழுத்து
உன் முகத்தை மூடிக்கொள்
உன் ஒளி வெளிச்சத்தில்
இந்த உலகம் எனக்கு
இருளாய்தான் தெரிகிறது.

0 Comments: