காலம் கடந்து வந்த கடிதம்


தபால்காரனுக்காக
காத்திருந்த காலம்
சுகமானதாகவே இருந்தது..!
ஒவ்வொரு நாளும்
அம்மாவின் கடிததிற்கும்
அப்பாவின் மணியாடருக்கும்
காத்திருந்த அந்த விடுதி நாட்கள்
இன்று வந்து விடும்
நாளை வந்து விடும் என்று
பணி ஆணைக்கு காத்திருந்த நிமிடங்கள்
சுமையானது தான் என்றாலும்
காலம் கடந்து வந்த போது கூட
சுகமானதாகவே இருந்தது..!
ஆனால் காலம் கடந்து வந்த
அவளின் காதல் கடிதம் மட்டும்
என்றும் சுமையானது..!

0 Comments: