காதல் என்றாலே தப்பு.. அதை ஒரு கெட்ட வார்த்தையாக எண்ணி உச்சரிக்கவே பயந்திருந்த காலம் போய் இப்போது கள்ளக் காதல் கூட குற்றம் இல்லை என்ற அளவுக்கு காலம் நம்மை கொண்டுவந்து விட்டிருக்கிறது..
இப்படியே போனால் இந்த சமூகம் என்னவாகும் என அஞ்சுவோருக்கு இடையில்.. இதையே சமூக வளர்ச்சி என கருதி கொண்டாடிக் கொண்டிருக்கும் சிலரையும் இங்கு காணமுடிகிறது..
அத்தகைய இருதரப்பினருக்கும் இடையில் நிகழும் ஒரு காரசார விவாதம் நம் காதுகளில் வந்து விழும் போது செவித்திறனற்றவனாய் அதை கடந்து போவது என்பது முடியாமல்.. பேருந்துக்கு காத்திருந்த கொஞ்ச நேரம் அந்த விவாததிற்கு செவி கொடுத்தேன்.
சென்னையில் மிக முக்கியமான பகுதி.. காலை நேர பரபரப்பு.. வாகன நெரிசல்களில் சிக்கித் தவிக்கும் சாலை ஓர் பேருந்து நிருத்தத்தில் தான் நான் நின்று கொண்டிருந்தேன்.. அருகாமையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில்.. செய்தித் தாள்களின் பேனர்கள் தொங்கவிடப்பட்டிருந்தன.. அவற்றில் தலைப்புச் செய்திகளை வாசித்திவிட்டு அமைதியாக நின்று கொண்டிருந்த போதுதான் என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த இருவர் பேச தொடங்கினர். அவர்கள் இருவரும் அநேகமாக ஒரே அலுவலகத்தில் பணிபுரியக்கூடும் என நினைக்கிறேன். அல்லது நண்பர்களாக இருக்கலாம். சரி அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் விவாதிக்க தொடங்கிய செய்தி..சென்னை திருவான்மியூர் கடற்கரையில், திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கொலை செய்ய முயன்ற பெண், அவரது காதலனுடன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார் என்பதுதான்..
முதலில் இப்படித்தான் ஆரம்பித்தார் ஒருவர்:-- டேய் ரவி.. என்னடா நாடு இது.. இப்படி கேடுகெட்டு போயிகிட்டு இருக்கு.. டி.வி சீரியல் ஆரம்பிச்ச்சு நியூஸ் பேப்பர் வரைக்கும்.. ஒரே இல்லீகல் காண்டாக்ட் விசயாமாவே.. பூஸ்ட் பண்ணுராங்க.. கொஞ்சமாவது இந்த ஊடகங்களுக்கு சோசியல் ரெஸ்பான்ஸ் இருக்கா..
இதுல என்னடா இருக்கு நாட்டுல நடக்கிற விசயத்ததான மீடியாவுல காட்டுருங்க.. அதுதான மீடியோவோட வேலையும் கூட உனக்கு என்ன பிரச்சனை இதுல..
அப்படி இல்ல.. ரவி நல்ல விசயங்கள கேட்டுகிட்டும் பார்த்துக்கிட்டும் இருந்தா. மனசு எப்போது நல்லதையே நினைக்கும்.. இப்படி நம்ம சுற்றி நடக்கிற கெட்ட விசயங்கள்.. பரப்புரதால. சின்ன பசங்க மனசும் கெட்டு குட்டிச்சுவரா போயிடும்..இல்லையா.. அதுமட்டும் இல்லாம பாரு அன்னைக்கு எதுதப்பு எதுசரின்னு சொல்லிக் கொடுத்து கட்டுப்பாடான ஒரு சமூகத்தை நம்ம முன்னோர்கள் கட்டிக்காத்து வந்தாங்க.. இன்னைக்கு எல்லா தலைகீழா போயீடுச்சு.. ஒருபால் உறவு, கள்ளக் காதல் இப்படி எதுவேமே தப்பு இல்லன்னு சொல்லிக்கிட்டே போனா... நாளைக்கு நம்ம கலாச்சாரம் என்ன ஆகும்
மண்ணாங்கட்டி போடா கலாச்சாரமாவது ஒண்ணாவது.. நேத்து உங்க தாத்தாவுக்கு தாத்தா எப்படி வாழ்க்க வாழ்ந்தார்ன்னு உனக்கு தெரியுமா.. இல்லை அந்த காலத்தில வாழ்ந்தவங்க யாரும் 2 பொண்டாட்டி மூணு பொண்டாட்டி இல்லாம் இருந்தாங்கலா.. சொல்லு.. எல்லா காலத்திலையும் நீ சொல்லுற இந்த விசயம் நடந்தது.. அப்ப பொண்ணுங்க யாரும் எதிர்த்து பேச முடியாம இருந்தாங்க.. அவங்கள அடக்கி வச்சிருந்தாங்க. இப்ப அவங்களுக்கு, கல்வி தைரியம்
கொடுக்கப்பட்டிருக்கு... அதோட மட்டும் இல்லாம இன்னைக்கு மீடியா அதிகம் சோஷியல் மீடியா இருக்கு அதனால எல்லாமும் வெளியில தெரியுது..
அதுக்காக கள்ள காதல், கணவன கொலை செய்றது எல்லாமும் சரின்னு ஆயிடுமா..
சரின்னு நான் சொல்ல கண்ணா.. அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ்றதுல்ல தப்பு இலைன்னு சொல்லுற, குற்றம் எல்லா காலத்திலையும் நடதிருக்கு.. இன்னைக்கு ஈசியா வெளிய தெரியுது அவ்வளவுதான்..
இல்லடா நீ என்ன சொன்னாலும் சரி, கட்டிய புருஷன, பெத்த குழந்தைகள எவனோ ஒருத்தனுக்காக கொல செய்றது.. போன்ற கொடுரமான குற்றங்கள ஏத்துக்க முடியாது.. அப்படி என்ன காதல் கண்றாவியோ.. தெரியல.. முன்னாடி எல்லாம் பெண்கள் இப்படி கிடையவே கிடையாது.. நியாயம், தர்மம், கடவுள் அது இதுன்னு பெண்கள் கிட்ட ஒரு பயபக்தி இருந்தது.. நீ சொல்லுற நவீன மாற்றத்துல இது எல்லாம் சுத்தமா இல்லாம போயிட்டு இருக்கு.. எங்கப் போய் முடியப் போகுது..!
அது சரிதான்.... குழந்தைகள கொலை செய்றது எல்லாம் ரொம்ப தப்பு.. ஆனா அவ.. அவளுக்கு பிடிச்சவனோட வாழந்துட்டு போறதுல என்ன வந்திருச்சு.. ஏன் பொண்ணுங்கள கட்டாயப்படுத்தி ஜாதி, அந்தஸ்துன்னு பார்த்து பிடிக்காத ஒருவனுக்கு கல்யாணம் பண்னிவைக்கிறாங்க.. அது தப்பு இலையா..
இல்லையே.. ரவி இப்ப அபிராமி செய்திய பாரு.. அந்த பொண்ணு காதலிச்சு கல்யாணம் பண்ணி குழந்தையெல்லாம் பெத்துகிட்டதுக்கு பின்னாடி இன்னொருத்தன் மேல காதல் வரும் அதுக்காக குழந்தைகள புருஷன் கொலை செய்வாங்களா. இது எப்படி சரி..
ராஜா நான் எதையும் சரின்னு வாதாட வரல, சட்டப்படி பொண்ணுங்க வாழ்க்கைய தீர்மானிக்க அவங்களுக்கு உரிமை இருக்குன்னு சொல்லுற. அதுக்காக அபிராமி மாதிரி பொண்ணுங்களுக்கு நான் சப்போர்ட் பண்ண மாட்டேன். சமூகத்தில பெரிய மாறங்கள் சட்டதிருத்தங்கள் வரும் போது.. அத தப்பா புரிச்சுகிட்டு பேசுறவங்களும் செயல்படுகிறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க... அதனால நாம மாற்றத்தை மொத்தமா நிராகரிக்க முடியாது... ஓகேவா..
என்னவோடா நீ சொல்ல்றுத எல்லாம் என்னால புரிச்சுக்க முடியல.. அந்த காலத்தில அனுபவ ரீதிய ஒரு சமூகத்த கட்டி அமைச்சு எல்லாத்துக்கு ஒரு பழமொழி சொல்லி வச்சாங்க பாரு அது எல்லாமும் ரொம்ம சரின்னுமட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்.. இப்ப பாரு பெண் புத்தி பின்புத்தின்னு சொன்னது போலதான் ஆச்சு அபிராமி நிலம..! அதுமாதிரி இப்ப நிறைய செய்திகள பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!
நாட்டுல தொழில் நுட்பம் வளர வளர மனித உணர்வுகள் மங்கிப்போய் அன்பான கணவன், மனைவி, குழந்தைகள் என்ற குடும்ப உறவுகள் கொஞ்சம் கொஞ்சமா சிதைஞ்சுகிட்டு வருதுன்னு நினைக்கும் போதும் பயமா இருக்குடா..!
சரி சரி கவலைய விடு.. உன் வாழ்க்கை உனக்கு நல்லபடியா அமையும் பயப்படாதா... வா பஸ் வந்திருச்சு ஏறலாம்.. என்று சொல்லி இருவரும் ஏறிய அதே பேருந்தில் தான் நானும் ஏறினேன்.. கூட்டம் நிறைந்த அந்த பேருந்தில்... பெண்களை உரசும் ஆண்களும், ஒரு ஆணிடம் இருந்து பிட்பாக்கெட் அடிக்கும் ஒரு பெண்ணும் என் கண்ணில் பட்டார்கள்.. எல்லாவற்றையும் கண்டும் காணமலும் கேட்டும் கேட்காமலும் சராசரி மனிதனாக நான் கடந்து செல்கிறேன் என் பாதையையும் வாழ்க்கையையும்...!
Super katturai.