எனக்குள் நீ...

எனக்குள் நீ...

இமைக்கும்
நொடிப்பொழுதில்
நோயாக வந்தவள்..!
கனக்கும் இதயத்தை
காற்றாக செய்து
பறக்கும் எண்ணங்களில்
சிறகாக விரிந்தவள்..!

எனக்குள் நீ..!

மொழி அறியாத தேசத்தில்
விழிகளில் வார்த்தைகளை வீசி
மெளனக் கவிதை தந்தவள்
மோகனமாய்..
மொட்டு மலரும் தருணமாய்
தென்றல் தொட்டுச் செல்லும்
மழையின் மேகமாய்

எனக்குள் நீ..!

நீராய்
நெருப்பாய்
நிலவாய்
மலராய்
பேரிறைச்சலாய் வரும்
ஓர் அருவியாய்
மொத்தத்தில்
பேரானந்தமாய்
எனக்குள் இருக்கிறாயடி நீ

நான் மட்டும் ஏனடி
உனக்குள்
வீரியமற்ற விதையாய்
விழுந்து கிடக்கிறேன்.!

0 Comments: