உன் கண்ணில் வரும் மின்னல்

பல்லவி   

(ஆ)    கண்ணே என் கண்ணே-உன்
    கண்ணில் வரும் மின்னல்
    என்னை தாக்குதே
    சொல்லில் சொல்லில்
    சொல்லில் சுவரங்கள்
    எழும் சேருதே..!

(பெ)    நா..ந.நன்ன... நா ந நன்ன..
    நா.ந..நனன
    காதலென்ன காதலென்ன
    கண்ணாமூச்சிதானா
    நானுமென்ன நானுமென்ன
    உன் கையில் பாவைதானா

சரணம்-1

(ஆ)    மண்ணில் ஒரு சொர்க்கம் கண்டேன்
    எந்தன் மனம் மயங்கி நின்றேன்
    பேசுமிரு விழியின் மொழி கேட்டு
    எந்தன் மனம் மயங்கி நின்றேன்

(பெ)    விழியசைவில் வம்பு செய்தேன்
    விடைதேடுமுனை இருளுக்குள் புதைத்தேன்
    விடியலில் விடுவித்தேன்
    நீயேயென் சூரியன்

(ஆ)    என் வானில் நீ
    தேயாயத நிலவானாய்
    உன் வாழ்வில் நான்
    நீங்காத உறவானேன்
   
   
பல்லவி   

(ஆ)    கண்ணே என் கண்ணே-உன்
    கண்ணில் வரும் மின்னல்
    என்னை தாக்குதே
    சொல்லில் சொல்லில்
    சொல்லில் சுவரங்கள்
    எழும் சேருதே..!

(பெ)    நா..ந.நன்ன... நா ந நன்ன..
    நா.ந..நனன
    காதலென்ன காதலென்ன
    கண்ணாமூச்சிதானா
    நானுமென்ன நானுமென்ன
    உன் கையில் பாவைதானா

சரணம்-2

(ஆ)    என் ஆசையெல்லாம் உன்
    அன்பில் வெல்வேன்
    ஆனந்தமெனும் பாதையில்
    செல்வேன்

(பெ)    உன் பாதம் போகும் பாதை
    நான் தந்ததல்லவா
    நீ காணும் இந்த உலகம்
    எனதல்லவா

(ஆ)    உனையன்றி வேறுலகம்
    நான் காணவில்லை
    என் காதல் சொல்ல
    சொல் ஒன்றுமில்லை

பல்லவி   

(ஆ)    கண்ணே என் கண்ணே-உன்
    கண்ணில் வரும் மின்னல்
    என்னை தாக்குதே
    சொல்லில் சொல்லில்
    சொல்லில் சுவரங்கள்
    எழும் சேருதே..!

(பெ)    நா..ந.நன்ன... நா ந நன்ன..
    நா.ந..நனன
    காதலென்ன காதலென்ன
    கண்ணாமூச்சிதானா
    நானுமென்ன நானுமென்ன
    உன் கையில் பாவைதானா

0 Comments: