நாடாளுமா... ஆம் ஆத்மி


இந்த சமூகத்தில் மொழிக்கு மட்டும் அல்லாமல் தனிமனிதனுக்கும், குடும்ப சம்பிரதாய சடங்குகளுக்கும் சமூகத்திற்கும் அரசியலுக்கும் என தனித்தனியே இலக்கணங்கள் வகுத்தனர் சான்றோர்கள். அரசன் நாட்டினை ஆளுவதற்கு எற்ற வழிமுறைகளைக் கூறும் வகையில் அரசனின் கடமை, அமைச்சர்கள், தூதர்கள் ஒற்றர்கள், வெளிஉறவு, நீதி, வரி, படை, போர், நாடு, நிர்வாகம் முதலானவற்றைப் பற்றித் திருக்குறளும், மனுதர்மமும் விரிவாகப் பேசுகின்றன. சங்ககாலத்தில் மக்களைக் காத்து முறையாக நீதி வழங்குகின்றவனே சிறந்த அரசன் என்றும், அத்தகையவனே இறைவனுக்குச் சமம் என்றும் கருதப்பட்டான். 

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே எமனாக மாறும்; செங்கோல் வளைந்தபின் உயிர் வாழ்தல் நன்று அன்று; அரசன் நல்லாட்சி செய்தால்தான் அந்நாட்டில் வாழும் மகளிர்க்கும் கற்பு வாழ்க்கை சிறக்கும் என்பன போன்ற பல அரசியல் உண்மைகளைப் பேசுகிறது சிலப்பதிகாரம். அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலை நாட்டுகிறான். அறியாது பசுவின் கன்றினைக் கொன்ற இளவரசனைப் பலிகொடுத்துப் பசுவின் துயர் களைந்த மனுநீதிச் சோழனைப் பற்றிய குறிப்பைச் சிலப்பதிகாரத்தில் பார்க்கிறோம். 

படித்து பார்த்து நினைத்து பார்த்து வாழ வேண்டிய இலக்கியங்களும் இலக்கணங்களும் இங்கு நிறைந்து கிடந்தாலும் இவற்றுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை என்றது போல் இன்றைய அரசியல்வாதிகளும் அரசாங்கமும் மாறிவிட்டன.  அரசியல் கட்சிகள் தரமானவையாக இருந்தால் தான் ஜன நாயகம் தழைத்தோங்கி மக்கள் சந்தோஷமுடன் வாழ்வார்கள். ஆனால் இந்தியாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளின் போக்கினால் இந்தியாவின் எதிர்காலம் கேள்விகுறியாக மாறி கொண்டிருக்கிறது. மாநிலங்களுக்கிடையே தங்களின் அரசியல் லாபத்திற்காக விரோத மனப்பான்மையை வளர்க்கின்றார்கள் அரசியல்வாதிகள். மதவாரியாக கட்சிகளும், ஜாதி வாரியாக கட்சிகளும் வந்து கொண்டே இருக்கின்றன. மதத்தின் பெயரால் உருவாக்கப்படும் கட்சிகளால் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய ஜனநாயகம் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியிருக்கிறது. ஜாதியின் பெயரால் உருவாக்கப்படும் கட்சிகளால் பிற ஜாதியினர் தாக்கப்படுவார்களோ என்ற அச்சத்தை தோற்றுவிக்கப்படுகிறது. பிராந்தியக் கட்சிகள் இந்தியாவைப் பற்றி சிறிது கூட சிந்தித்துப் பார்ப்பதே இல்லை. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது விலைக்கு வாங்கப்பட்ட பிராந்திய கட்சிகளின் எம்பிக்களைப் பற்றி மீடியாக்கள் எழுதிக் குவித்தன. இப்படி எந்த அரசியல் கட்சியானாலும் சரி பொதுமக்களின் நன்மைக்கு எந்த நன்மையும் செய்வதாகத் தெரியவில்லை. 

மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் தேர்தல் நேரத்தில் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு மக்களை சந்தித்து வாக்குறுதிகளையும் நல வாழ்வு திட்டங்களையும் அள்ளி தெளிக்கின்றனர். ஆனால் அதன் பின்னனியில் இருப்பது என்ன.. யோசிக்கும் நிலையில் மக்களும் இல்லை. அரசியல்வாதிகளும் யோசிக்க விடுவாதகவும் இல்லை. இப்போதெல்லாம் மக்கள் என்பவர்கள் கூட ஜாதியின் அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையிலும் கட்சிகளாகத்தான் பிரிந்து கிடக்கிறார்கள். மிச்சம் இருக்கும் மக்களோ ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்று உழைப்பு ஒன்றே உயிர் மூச்சு என மாதந்திர செலவுகளுக்கு மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள்.  

தேசத்தில் நடப்பது என்ன.. ஆளும் கட்சிகளும் எதிர்கட்சிகளும் எதற்கு சண்டை இட்டு கொள்கிறார்கள் என்று சிந்தித்து எது மக்கள் நலன் விரும்பும் கட்சி என்று முடிவு செய்வற்குள்.. இவர்கள் மேல் அவர்களும் அவர்கள் மேல் இவர்களும் புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் சரமாரி தொடுத்துக்கொண்ட்டே மக்களை முடிவுக்கு வரவிடாமல் குழப்பிவிட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதுதான் அரசிய்ல ஜாதி. இதற்கிடையில் உட்கட்சி பூசலால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, மக்களை குழுப்பும் பணியில் புதிய கட்சி வேறு தோன்றி விடுகிறது. 

இதோ இப்போது அந்த பணியை கையில் எடுத்துள்ளது ஆம் ஆத்மி ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர் கள் சிறையில் அடைக்கப் படுவார்கள் என கேஜ்ரி வால் கூறியுள்ளார். அன்னா குழுவில் இருந்து பிரிந்த அரவிந்த் கேஜ்ரிவால் தனியாக அரசியல் கட்சி தொடங்கினா 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியல் சாசன சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே தேதியில் தனது கட்சியை முறைப்படி தொடங்குவேன் என்று அரவிந்த் கேஜரிவால் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் முறைப்படி ஆம் ஆத்மி கட்சியை தொடங்கியுள்ளார். கட்சியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசும் போது”” ஊழலுக்கு எதிரான போராட்டம் காரணமாக இந்த புதுக்கட்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி என பெயர் வைத்துள்ளோம். இந்த கட்சிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என நம்புகிறேன். எங்கள் போராட்டம் அரசியல்வாதிகளுக்கும், சாதாரண மக்களுக்கும் நடைபெறும் போராட்டம். கடந்த 65 ஆண்டுகளாக கஷ்டப்பட்ட சாதாரண மனிதன் சொந்த கட்சியை நிறுவி நாடாளுமன்றத்தில் அமர போகிறான். ஊழலை கட்டுப்படுத்தினால் பணவீக்கம், விலைவாசியை கட்டுப்படுத்திவிடலாம்.

மற்ற அரசியல்வாதிகளுக்கு இருப்பதைப் போன்று எனக்கு ஊழல் புரிவதிலோ, குற்றம் புரிவதிலோ அனுபவம் இல்லை. அதுபோன்ற அனுபவம் எனக்குத் தேவையில்லை. நாட்டில் ஊழல் அதிகரித்து வருவதே பணவீக்கத்துக்கு காரணம். ஊழலைக் கட்டுப்படுத்தினால், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த முடியும்
ஊழல் அமைச்சர்களின் பட்டியலுக்கு முற்றுப் புள்ளியே இல்லை. ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் 6 மாதத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள். என்று மக்கள் இடத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏந்தி வருகிறார். அரவிந்த் கெஜிரிவால்.  அரசியல் மேடையில் எத்தனையோ நாடகங்களை பார்த்த நாம், இதோ இதையும் பார்ப்போம் ஆம் ஆத்மி ஒரு நாடகமா நாடாளுமா என்று..!

0 Comments: