அவனை ஒழிய அமரரும் இல்லை


தொகையறா

அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே..  (திருமந்திரம்)
 ஓம் நமச்சிவாய...

பல்லவி

அவனே எல்லாம் அவனே..
அவன்தான் எங்கள் சிவனே...
சிவனை தினமும் தொழுதால்
நிகழும் யாவும் நலனே..
சிவனை தினமும் தொழுதால்
நிகழும் யாவும் நலனே..
அவனே எல்லாம் அவனே..
அவன்தான் எங்கள் சிவனே...

சரணம் -1

உயிராய் உறவாய் எங்கும் நிறைந்தே
உருவாய் அருவாய் உலகம் ஆள்வாய்..
கடலாய் அலையாய் கருணை அருள்வாய்
மழையாய் வெயிலாய் அருளைப் பொழிவாய்
மலைமலையாய் மகிழ்வைத் தருவாய்..!
அண்ணாமலையின் சிவனே..
மலைமலையாய் மகிழ்வைத் தருவாய்..!
அண்ணாமலையின் சிவனே..
மொழியும் ஒலியும் உன் இசைவே
திசைகள் அசைவும் உன் வசமே..!
மொழியும் ஒலியும் உன் இசைவே
திசைகள் அசைவும் உன் வசமே..!

அவனே எல்லாம் அவனே..
அவன்தான் எங்கள் சிவனே...
அவனே எல்லாம் அவனே..
அவன்தான் எங்கள் சிவனே..

சரணம் -2

நிலவாய் கதிராய் ஒளியை தருவாய்
தவமாய் வரமாய் தினமும் வருவாய்
அணலாய் கனலாய் தீமை எரிப்பாய்
புதிராய் விடையாய் புவியில் இருப்பாய்
துளித்துளியாய் பனியைப் பொழிவாய்
ஆனந்தமருளும் சிவனே..
துளித்துளியாய் பனியைப் பொழிவாய்
ஆனந்தமருளும் சிவனே..
பொருளும் புகழும் உன் உருவே..
சரணம் சரணம் என் குருவே..
பொருளும் புகழும் உன் உருவே..
சரணம் சரணம் என் குருவே..

அவனே எல்லாம் அவனே..
அவன்தான் எங்கள் சிவனே...
அவனே எல்லாம் அவனே..
அவன்தான் எங்கள் சிவனே..

https://www.youtube.com/watch?v=g57EKAOqyiQ

0 Comments: