”எவன்டா” தெலுங்கு டப்பிங் படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார் கவிஞர் திருமலை சோமு

தெலுங்கில் ரிலீசான ‘பலுபு’ படம் தமிழில் ‘எவன்டா...’ என்ற பெயரில் ‘டப்’ ஆகிறது. இதை சுவாதி, ஹர்ஷினி வழங்கும் பத்ரகாளி பிலிம்ஸ் சார்பில் பிரசாத், வெங்கட் ராவ், சத்ய சீத்தாலா இணைந்து தயாரிக்கின்றனர். 

ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், அஞ்சலி, ராய் லட்சுமி, பிரகாஷ்ராஜ், நாசர் உட்பட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு, வின்சென்ட். 

இசை, தமன். கோபிசந்த் மலினேனி இயக்கியுள்ளார். வசனம் எழுதி தமிழாக்கம் செய்துள்ள ஏ.ஆர்.கே.ராஜராஜா, படம் பற்றி கூறியதாவது:

ரவிதேஜாவுக்கு திருமணம் செய்து வைக்க, ஒவ்வொரு பெண்ணிடமும் தானே வலியச்சென்று பேசுகிறார் அப்பா பிரகாஷ்ராஜ். பணத்துக்காக இளைஞர்களை ஏமாற்றும் ஸ்ருதிஹாசனிடம், தன் மகனை காதலிக்க வற்புறுத்துகிறார்.  இரண்டு பேருக்கும் திருமணம் நடக்கிறது. அப்போது பிரகாஷ்ராஜின் மகன் ரவிதேஜா இல்லை என்ற உண்மை தெரிகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. 

இது முழுக்க முழுக்க காமெடி கலாட்ட படம். படம் பார்க்கும் அனைவரும் நிச்சயமாக வயிறுகுலுங்க சிரிப்பார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.  ஒளிப்பதிவு - வின்சென்ட், இசை - எஸ்.எஸ்.தமன், பாடல்கள் - அருண்பாரதி,
திருமலை சோமு, வடிவரசு, மீனாட்சி சுந்தரம். கதை - கோனா வெங்கட், கே.எஸ்.ரவீந்திரா. திரைக்கதை, இயக்கம் - கோபிசந்த். வசனம், தமிழ் உருவாக்கம் - ARK.ராஜராஜா

0 Comments: