மரணம் தின்ற நட்புஇறைவா
நல்லோர் தீயோர்
என்றில்லாமல் எல்லோருக்கும்
வைத்தாய்.. மரணம்

அந்த மரணம் எனக்கு
ஒன்றும் புதிதில்லை
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..

தோல்வியால் மூச்சிறைத்து
துரோகத்தின் வலியில்
நம்பிக்கை இழந்த நாட்களில்- என
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..

ஆனால் ஒவ்வொரு முறையும்
என்னை மீண்டும் உயிர்த்தெழச்செய்வது
மரணம் தின்ற நட்பு மட்டுமே..

0 Comments: