பத்திரிகைச் சந்தையில் காகித குப்பைகளாக எத்தனை எத்தனையோ இன்றும் புதிது புதிதாக வந்த வண்ணம்தான் உள்ளன.
தொழில் நுட்ப உலகில் இந்த புத்தகங்களையெல்லாம் யார் வாங்கிப் படிக்கிறார்கள் என்ற ஐயம் பலருக்கும் இருக்கும்.. நானே பல நேரங்களில் புத்தகடைகளில் தொங்கும் வார, மாத இதழ்களை பார்த்து எனக்குள்ளாக கேட்டிருக்கிறேன்..
ஆனால் அவற்றில் இருந்தெல்லாம் மாறுபட்ட ஒன்றாக (புகழ்ச்சிக்காக சொல்லவில்லை) உண்மையில் ஆன்மிக வாசகனுக்கு எண்ணங்களில் உயர்ந்த கோபுரமாக உதயமாகி இருப்பதுதான் இரா. குமார் அவர்கள் தொடங்கி நடத்திவரும் சொற்கோயில் மாத இதழ்..
இந்த இதழில் பெருமையை நான் பேசினால் அது வெறும் புகழாரமாக தெரியலாம்.. அதனால் நண்பர்கள் வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு.. உணர்ந்து அதன் உண்மையை சொற்கோயில் ஆசிரியரோடு பகிருங்களேன்...
0 Comments:
Post a Comment