வாழ்வில் உயர்வான பலன்களை பெற... ஆலோசனைகள்..!

நேர்மறை சிந்தனை நமக்கு அதிக நம்பிக்கையை கொடுக்கும். நம் எண்ணங்களை நல்வழிப்படுத்தவும் மன அழுத்தம் மற்றும் அது தொடர்பானநோய்களை குணப்படுத்தவும் செய்யும். நேர்மறை சிந்தனைகளின் சக்தி நம் உடலுக்கும் மனதிற்கும் பல வகையான  நலன்களைத் தரும்என்பது  அறிவியல் பூர்வமாக நமக்கு பல வழிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

நேர்மறை சிந்தனை என்பது நேர்மறையான கற்பனை, நேர்மறையான பேச்சு, உங்கள் சிந்தனை மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்றால்  முடிந்தவரை நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு அதை செயல்களில் கடைபிடிக்க உறுதி எடுங்கள்.
1. ஆக்கப்பூர்வமான நாளை தொடங்குங்கள்
ஒவ்வொரு நாளையும் நாம் நேர்மறை எண்ணங்களோடு தொடங்க வேண்டும்எதிர்மறை சிந்தனை மற்றும் பதற்றத்துடன் காலைப் பொழுதைதொடங்கினால் அந்த நாள் முழுவதும் நமக்கு அது வெற்றிகரமான பொழுதாக இருக்காது.
2. இந்த நாள் இனிதாக..!
நாள் முழுவதும் தடைகளை எதிர்கொண்டால் அது சரியானதாக இருக்காது.  அத்தகைய சவால்களை நீங்கள் சந்திக்கும் போது,  சின்ன விசயமோபெரிய விசயமோ அமைதியாக இருந்துவிடுவது நல்லதுபோக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கும் போதுநம் நம்மை பதற்றப்படுத்திக்கொள்வதை விட இனிமையான இசையை கேட்டு, காத்திருக்கும் நேரத்தை கடந்து செல்வது எவ்வளவு நல்லதோ அதேபோல் நாம் நமதுநெருக்கடிகளையும் கடந்து செல்வது சிறந்தது.
3.  நகைச்சுவை உணர்வோடு இருங்கள்
நெருக்கடியான நேரத்தில் கோபப்படுவதையோபதற்றமடைவதையோ விடுத்து நகைச்சுவை உணர்வோடு இருக்க கற்றுக் கொண்டால் எவ்வளவுபெரிய பிரச்னையும் நம்மை இலகுவாக கடந்து சென்று விடும்இதுவும் கடந்து போகும் என்ற தத்துவ உணர்வோடு எல்லா சூழ்நிலைகளிலும்மனதை ஒரு நிலையோடு வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்
4.  தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்
நாம் எப்போதும் எல்லா நேரங்களிலும் மிகச் சரியாக எதையும் செய்து விடமுடியாதுதவறு என்பது மனித இயல்புபல நேரங்களில் நாம் செய்யும்வேலைகளில் ஏற்படும் தவறுகள் அதனால் அடைந்த தோல்வியைப் பற்றி சிந்தித்துக்  கொண்டேயிருக்காமல் அடுத்த நிலையைப் பற்றி யோசித்துவேகமாகவும்விவேகமாகவும் செயல்படத் தொடங்க வேண்டும்.  தோல்வி என்பது நிலையானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டால்போதும்.
5.  நேர்மறை பேச்சு - செயல்களை நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும்
எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பே இது என்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு தோல்வியே ஆனாலும்பரவாயில்லை அனுபவமாக இருக்கட்டும் என்று எதிலும் முயற்சியை மேற்கொள்வது நமக்குள் நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்ஒரு முறைதோல்வி அடைந்தாலும் நேர்மறை எண்ணம் மற்றும் நம்பிக்கை இருந்தால் மீண்டும் நீங்களே முயற்சி செய்து வெற்றி காண்பீர்கள்.
6.  இந்த நேரத்தை கவனத்தில் கொள்ளுங்கள்
இன்று என்ன என்பதை விட இப்போது என்ன என்பதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்பழையவற்றை தூக்கி எறியுங்கள்கடந்த கால மோசமானஅனுபவங்கள் எதுவானாலும் அந்த வலியை சுமந்து கொண்டு திரியாமல் அதன் தவறுகளை உணர்ந்து உங்கள் கடமைகளை சரியாக செய்வதில்மட்டும் கவனம் செலுத்துங்கள்.
7.  நேர்மறையான நண்பர்கள்வழிகாட்டிகள் மற்றும் சக பணியாளர்களைக் கண்டறியுங்கள்
நம்மைச் சுற்றி எப்போதும் நேர்மறையான சிந்தனை கொண்டவர்கள் இருப்பார்களே ஆனால் நமது சிந்தனையும் நேர்மறையானதாகவே இருக்கும்எண்ணங்கள் நேர்மறையானதாக இருந்தால் செயல்கள் ஆக்கப்பூர்வமானதாக மாறும்எனவே எதிர்மறை எண்ணங்கள் நமக்குள்ளும் நம்மைச்சுற்றியும் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்நாமும் மற்றவர்களுக்குள் நேர்மறை எண்ணங்களை விதைக்க கற்றுக்கொள்ள வேண்டும்.அப்போதுதான் நீங்கள் வெற்றியாளராக முடியும்.
எண்ணம் போல் வாழ்வு என்று சொல்வது போல் நம் எண்ணங்களை தூய்மையானதாகவும்நேர்மறையானதாகவும் வைத்துக் கொண்டால்வாழ்வில் உயர்வான பலன்கள் கிடைப்பது நிச்சயம்.

0 Comments: