காலையில் சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து வழக்கம் போல வாங்கிங் புறப்பட்டுவிட்டார் சுந்தரம்.. அவருடன் எப்போதும் வாங்கிங் வரும் கதிரேசன் இரண்டு மூன்று நாட்களாக வரவில்லை.. இன்று வருவாரா என்று தெரியவில்லை என தனக்குள்ளாக சொல்லிக்கொண்டே வீட்டை விட்டு கிளம்பினார்… மகன் மருமகள் பேரக்குழந்தைகள் எல்லாம் தூங்கிக் கொண்டிருந்தனர்… கேட் அருகே வந்த போதுதான் பார்த்தார் சாலையில் கதிரேசன் நின்று கொண்டிருந்தார். … என்ன கதிர் இரண்டு நாளா ஆளக் காணோம்..
கொஞ்சம் உடலுக்கு அசதியா இருந்தது… அதுதான் வரல.. அப்புறம் என்ன தீபாவளி வேலையெல்லாம் எப்படி போகுது வீட்டுல.. என்று கேட்டுக் கொண்டே நடக்க தொடங்கினான் கதிரேசன்..
சுந்தரத்திற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. அமைதியாக வந்து கொண்டிருந்த அவனிடம் மீண்டும் கதிரேசன் கேட்க..
அடபோப்பா… நீ வேற தீபாவளியெல்லாம்.. நம்ம சின்ன வயசுல கொண்டாடின மாதிரி இப்ப எங்க.. என்னத்த சொல்ல ஏம்பா சலிச்சுக்கிற..
எங்க உண்மையச் சொல்லு.. உங்க வீட்டுல என்ன நடக்குதுண்ணு..…அட அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. எங்க வீட்டுல என் மருமக ஒருவாரத்துக்கு முன்னாடியே பலகாரம் எல்லாம் சுட்டு வச்சுட்டா..
இன்னைக்கு காலையில எல்லாரும் எந்திச்சு தலைக்கு எண்ண வச்சு ஒவ்வொருத்தரா குளிக்கப் போறாங்க.. அப்புறமா எண்ணெய் சட்டி வச்சு வட சுட்டு வச்சுருவா… நான் வாங்கிங் போயிட்டு போய் குளிச்சுட்டு புதுத்துணி உடுத்தி பூஜ பண்ண வேண்டியதுனான். அப்புறம் என்ன பட்டாசுதான்.. எனக்கு எப்போதும் போலதாண்டா தீபாவளின்னா ஒரே கொண்ட்டாட்டம் தான்.. கதிரேசன் சொல்லுவதை கேட்டதும் சுந்தத்துக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது..
ஏன்னா.. சுந்தரத்தின் மகன் மருமகள் இருண்டு பேரும் வேலக்கு போறாங்க.. நேத்து ராத்த்திரி கொஞ்சமா சுவிட் காரம் கடையில வாங்ங்கி வந்துட்டாங்க..
நினைச்சப்பம்லா புதுத்துணி எடுக்கிறதால தீபாவளிக்குன்னு தனியா ஸ்பெஷலா எடுக்கல.. ஏற்கனவே எடுத்தது ஒண்ணு ரெண்டு உடுத்தாம இருக்கு அதையே வச்சுக்கிடலான்னு சொல்லிட்டா.. போனவாரம் பசங்களுக்கும் சுந்தரத்துக்கும் மட்டும் ஒரு செட் டிரஸ் எடுத்துக் கொடுத்தாருக்கான் அவர் பையன் தருண்..
ஏம்பா சுந்தரம் இப்ப உனக்கு என்ன கவலை.. அதுதான் உங்க மகன் மருமக ரெண்டு பேரும் நல்லா சம்பாதிக்கிறாங்களே.. நீ ஏன் சலிச்சுக்கிற..தீபாவளிய நல்ல கொண்டாட வேண்டியதுதான..
நேற்று நைட் சிப்டுக்கு போயிட்டு லேட்டா வந்ததால ரெண்டு பேரும் நல்ல தூங்கிறாங்க.. எப்ப எழுந்திருப்பாங்கன்னு தெரியாது.. எப்படியும் 10 மணிக்கா ஆயிடும்.. அப்புறம் ஒவ்வொருத்தரா குளிச்சு முழுகி கடையில வாங்கிட்டு வந்த பலகாரத்த வச்சு பூஜ பண்ணிட்டு புதுத்துணி உடுத்திட்டு எல்லாரும் டிவி முன்னாடி உங்காந்திருவாங்க.. என் பேத்திக்கு பட்டாசு போட பயம்.. நான் மட்டும் என்ன செய்றது.. எல்லாரோட சேர்ந்து கொஞ்ச நேரம் டி.வி.பார்த்துட்டு தூங்கிடிவேன்..இதுக்குப் பேரு பண்டிகையாக நீயே சொல்லு.. இதத்தான் தினமும் செய்றோம்.. அந்த காலத்தில நான் சின்னப் பையனா இருக்கும் போது எப்படி தீபாவளி கொண்டாடினோம் தெரியுமா.. அவ்வளவு ஏன் நான் என் பையன வளர்க்கும் போது கூட எல்லா பண்டிகைகளையும் சிறப்பா கொண்டாடிக்கிட்டுதான இருந்தோம்.. என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லி முடித்தான் சுந்தரம்..
நீ சொல்லுறது உண்மதாண்டா அன்னைக்கு மாதிரி இன்னைக்கு இல்ல.எல்லா விசயமுமே.. நிறைய மாறிப்போச்சு என்று பேசிக் கொண்டே இருவரும் வழக்கத்தை விட கொஞ்சதூரம் கூடுதலாகவே நடந்து சென்று விட்டனர்.. சரிடா நேரம் ஆயிட்டு வா வீட்டுக்குப் போலாம் என்று அருகில் இருந்த பேருந்து நிலையம் சென்று நகரப்பேருந்தில் ஏறி விரைவாக வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். அப்போதுதான்.. சுந்தரத்துக்கு பெரும் அதிர்சியாக இருந்தது.. என்றும் இல்லாமல் இன்று மகன் தருண், புதுத்துணி உடுத்தி, மனைவி குழந்தையுடன் வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தான்..
சுந்தரத்தைப் பார்த்ததும்.. அப்பா சீக்கிரம் குளிச்சுட்டு புதுத்துணி உடுத்திட்டு வாங்க பட்டாசு வெடிக்கலாம்.. என்று சொல்ல அவன் கண்ணை அவனாலேயெ நம்ப முடியவில்லை..
கதிரேசனும் சுந்தரமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். என்னப்பா அப்படி பார்க்கிறீங்க. நம்ப முடியலையா.
ஆமாப்பா நான் சின்னப் பையானா இருக்கும் போது எப்படி பண்டிகை கொண்டடி எங்களா சந்தோசமா வச்சிருந்தீங்களே அதே போல எல்லா பண்டிகைகையும் டிவி பார்க்காம சிறப்பா கொண்டாடி உங்கள சந்தோசமா வச்சுக்லாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்..
எப்படி இந்த திடீர் ஞானோதயம்ன்னு யோசிக்கிறீங்களாப்பா.. நேத்து வாரப் பத்திரிகைக்கு நீங்க எழுதி வச்சிருந்த பண்டிகைங்கிற கதையப் படிச்ச அதுக்கப்புறம், எனக்கும் புத்தி வந்திருச்சுப்பா… வாங்க சீக்கிரம்.. கதிரேசன் அங்கில் நீங்களும் குடும்பத்தோட வாங்க என்று சொல்லி முடிக்கவும் கதிரேசன் வீட்டில் இருந்து அனைவருமே புத்தாடையுடன் வெளியில் வந்து பட்டாசு வெடிக்க தொடங்கினர்.
பட்டாசு சத்ததில் ஊமையாகிப்போயின அந்த தெருவில் இருந்த வீடுகளின் தொலைக்காட்சிப் பெட்டிகள்…! அனைவருமே வெளியில் வந்து ஒன்றாய் கொண்டாடி மகிழ திருவிழா கோலம்பூண்டது.. சுந்தரம் வசித்த தெரு..!
நாகர்கோவில் தினமலரில் வெளியான கதை
04/11/2018
Merkur - Expert Review 2021 - xn--o80b910a26eepc81il5g.online
The 1xbet Merkur หาเงินออนไลน์ online casino is known as the “best online 메리트 카지노 주소 casino” since 1998. It has over 80 games, including slots and table games from