அகவை ஐம்பதை கடந்து விட்ட
என் வீர தமிழனுக்கு..
ஒரு கடைக்கோடித் தமிழனின் கடிதம்..!
வாழ்த்தும் வயதில்லை என்பதால்
வணங்கி.. வரைகிறேன். இந்த மடலை
தமிழின் இலக்கணமாம்.!
தேமா..புளிமா.. நான் அறியேன்!
தமிழ் இனத்தின் இலக்கணமான
திருமா உனை அறிவேன்..
ஒரு கோடி ஆண்டு உன் ஆயுள் வேண்டும்-
அனல் பறக்கும் உன் சூரிய பார்வையில்
ஆகாயம் சூடாக வேண்டும்..!- நின் பேச்சு
நிலம் நீர் காற்றுக்கு மூச்சாக வேண்டும்.
''நீர்'' காற்றுக்கு மூச்சாக வேண்டும்.
நாடு சுதந்திரம் பெற்று விட்ட போதும்
சில வீதிகளில் விதைக்கப்பட்டிருந்த அடிமைத்தனத்தை
அறுத்தெரிந்த எம் நேசத்தலைவன். நீ
இதோ இன்னொரு சுதந்திர போருக்காக
வீறு கொண்டு எழுந்திருக்கும் விடுதலை சிறுத்தை நீ
உன் பாதை பூவனமாய் இருந்ததில்லை- என்றாலும்
உனை பின் தொடரும் நேயர்க்கு -நீ
நெஞ்சுரமாய் நின்று..
கற்பாதை மாற்றி பொற்பாதை தந்தருளும்- நின்
கருணை உள்ளம் போற்றுகிறேன்..!
ஒரு கோடி ஆண்டு உன் ஆயுள் வேண்டும்-
இல்லறம் காணா எம் இனத்தின் வரமே
தமிழ் இனத்தின் திறமே..!
ஒரு கனம் போதும்
உன் விழி அசைவில்
நடைமாறும்- தொண்டர்
படைசேரும்- திசை எட்டும்
தமிழர் கொடி ஏறும்..!
தமிழ் இனத்தின் திறமே
எம் இனத்தின் வரமே
ஆணையிடு..!
இலங்கையில் நம் இனத்தை கொன்ற
அரக்கர் படை அழித்து
இன்னொரு ராமாயணம் எழுதலாம்
இதோ இங்கேயே இருக்கிறார்
நம் இளைய கம்பன்
ஆணையிடு..!
தமிழ் இனத்திறமே..!
எம் இனத்தின் வரமே..!
பொருள் தேடி பொருள் தேடி
படித்த எத்தனையோ இலக்கியங்கள்
புரியாமல் போனதுண்டு
பொருள் ஏதும் தேடாமல்
இலக்கண மரபுக்குள் வாழும்
இலக்கியம் நீ..!
பொருள் ஏதும் தேடாமல்
இலக்கண மரபுக்குள் வாழும்
இலக்கியம் நீ..! என்றே
புரிந்தது உனை படித்த எனக்கு
பிடித்ததனால் படித்தேனா..!
படித்ததனால் பிடித்ததா..!
சொல்லத் தெரியவில்லை என்றாலும்
தமிழ் இனத்தின் திறமே..
எம் இனத்தின் வரமே..!
சொல்கிறேன் கேள்..!
உனைப்போல் ஒரு வீரம் மிக்க
தமிழனை வரலாற்றில் படித்ததுண்டு
ஒரு வாழும் வரலாறாய்..
உலா வரும்- உன்
சொல்லில் பேச்சில்
வீரம் மிக்க நடையில்
விண்ணுக்கே ஒளிதருகின்ற விழியில்
நானும் விழுந்தேன்..!
விழுந்ததும்தான் அறிந்தேன்
விளைநிலத்தில் விதையானதை..!
ஒரு கோடி ஆண்டு உன் ஆயுள் வேண்டும்
0 Comments:
Post a Comment