காதல் என்ற சொல்லாலே

பல்லவி

(ஆ)    காதல் என்ற சொல்லாலே
    பூமி சுத்துது தன்னாலே
    நானும் கொண்டேன் உன்மேலே
    நாணம் என்ன கண்மேலே

(பெ)     நாணம் என்ற சொல்லே
    நானும் கேட்டதே  இல்லே
    உன்னை கண்ட பின்னே
    பூத்தது என்ன என்னில்

சரணம்-1
   
(ஆ)     ஒ.. பெண்ணே ஒ..பெண்ணே
    ஏக்கம் கொண்ட வாழ்வில்
    சொந்தம் என்றே வந்தாய்   
    சொர்க்கம் ஒன்றை தந்தாய்..!
    உயிரடி நீ என் உயிரடி

(பெ)     நானும் இல்லை என்றால்
    நீயும் இல்லை அன்பே   
    என் காதல் ஒன்றே உன்னை
    வாழ வைக்கும் இங்கே..!   
    கண்மணி நான் உன் கண்மணி

(ஆ)    வாசம் கொண்ட மலரும்
    உன் கூந்தல் சேர ஏங்கும்
    பாசம் கொண்ட நானோ
    பா..ப பா.. பா..ப பா..
   
(பெ)    என்னால் தானே என்னால் தானே   
    உந்தன் உள்ளம் தவிக்குது.. உன்   
    எண்ணமெல்லாம் எண்ணமெல்லாம்
    வட்டி போல வளருது..!

பல்லவி

(ஆ)     காதல் என்ற சொல்லாலே
    பூமி சுத்துது தன்னாலே
    நானும் கொண்டேன் உன்மேலே
    நாணம் என்ன கண்மேலே
   
(பெ)    நாணம் என்ற சொல்லே
    நானும் கேட்டதே  இல்லே
    உன்னை கண்ட பின்னே
    பூத்தது என்ன என்னில்


சரணம்-2


(பெ)    காதலா ஓ.. காதலா... உன்னை
    மெல்ல மெல்ல கொன்றேன்-என்   
    விழி அசைவில் வென்றேன்..
   
(ஆ)    அன்பே உந்தன் காதலுக்கு
    என்னைப் பரிசாக தரவா- இது   
    காலம் வெல்லும் காதல் அல்லவா

(பெ)    உன்னை உயில் எழுத
    உனக்கே உரிமை இல்லை
    நீ என்பது நான் அல்லவா

(ஆ)    தேடி தேடி அடைந்த செல்வமெல்லாம்
    தேவதை உன் அழகில் தோற்பேன்
    நீயே என் செல்வமன்றோ

(பெ)    எங்கு நீ போனாலும்
    பாதை உனக்கு நானல்லவா
    பருவம் உனக்கு தேனல்லவா

பல்லவி

(ஆ)     காதல் என்ற சொல்லாலே
    பூமி சுத்துது தன்னாலே
    நானும் கொண்டேன் உன்மேலே
    நாணம் என்ன கண்மேலே
   
(பெ)    நாணம் என்ற சொல்லே
    நானும் கேட்டதே  இல்லே
    உன்னை கண்ட பின்னே
    பூத்தது என்ன என்னில்

0 Comments: