இந்தியாவில் குறை மின் கடத்தியின் (செமிகண்டக்டர்) தேவை முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இது நாட்டின் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியடைந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.
நுகர்வோர் மின்னணுவியல், வாகனம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் விரிவாக்கம், செயற்கை நுண்ணறிவு (AI) 5G போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் அறிமுகம் ஆகியவற்றின் மூலம் குறை மின் கடத்திகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்திய குறை மின் கடத்தி (செமிகண்டக்டர்) உற்பத்தி தொழில் 2026-இல் $55 பில்லியன் டாலரை எட்டும் என்று டெலாய்ட்டின் ஆய்வறிக்கை கூறுகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன்கள், வாகன உதிரிபாகங்கள், கணினிகள், தரவு சேமிப்பகம் உள்ளிட்ட தொழில் சந்தைகளில் 60 சதவீத்துக்கும் அதிகமான பங்குகளை இது கொண்டிருக்கும்.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் அண்ட் செமிகண்டக்டர் அசோசியேஷன்
(ஐஇஎஸ்ஏ) தலைவர் சஞ்சய் குப்தா கூறுகையில், உலகளாவிய
மின்னணு சந்தையில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியாவின் குறை மின்கடத்தி (செமிகண்டக்டர்) நுகர்வுத் தேவை, தொலைத்தொடர்பு, வாகனம், மின்னணுவியல்
தகவல் தொழில்நுட்பத் துறைகளின் விரிவாக்கத்தால் இயக்கப்படுகிறது என்றார். இதேபோல் உலகளாவிய செமிகண்டக்டர் தேவையில் இந்தியாவின் நுகர்வுத் தேவை சுமார்
20 சதவீதம் வரை இருப்பதாக, நாட்டின் சிஸ்டம்-ஆன்-சிப்களை
(SoCS)
வடிவமைக்கும் Mindgrove Technologies இன் இணை நிறுவனர் TR Shashwath, ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கூறினார்.
செமிகண்டக்டர்களின் மிகப்பெரிய நுகர்வு
ஒரு பயணிகள் வாகனத்தில் 10 முதல் 200 வெவ்வேறு
சில்லுகளாக இருக்கலாம்! மொபைல் போன்கள் பயன்பாட்டில் பெரிய அளவில் பங்கு வகிக்கிறது. நுகர்வோர் உபகரணங்கள் - BLDC மின்விசிறிகள் முதல் LED விளக்குகள் வரை சலவை இயந்திரங்கள், குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் வீட்டு உபயோகத்துக்கான தொழிநுட்ப சாதனங்கள் ஆகியவற்றில்
குறைமின் கடத்திகளின்
பெரிய தேவை உள்ளது என்று ஷஷ்வத் கூறினார். மேலும் இந்தியாவின்
எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் துறை வளர்ச்சியடைந்து வருவதாகவும், வரும் ஆண்டுகளில் செமிகான் ஏற்றுமதியில் அது முக்கியப்
பிரிவாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
‘மேக் இன் இந்தியா’ மற்றும் மின்னணுவியல் தேசியக் கொள்கை போன்ற
ஆதரவான அரசாங்கக் கொள்கைகளுடன், உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியா தனது பயணத்தைத் தொடரும்
என்றும், குறை மின்
கடத்தி உற்பத்தி துறையின்
வளர்ச்சி மற்றும் நுகர்வு புதிய உயரங்களை அடையும் என்று தான் நம்புவதாக IESA இன் சஞ்சய் குப்தா தெரிவித்தார்.
சில ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு
செமிகண்டக்டர் சந்தை 110 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று நிபுணர்கள்
கூறுகின்றனர். மேக் இன் இந்தியா கொள்கையுடன் செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை வழிநடத்த
இந்திய அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த துறையின்
ஏற்றுமதி சந்தையையும் நாடு
கைப்பற்றுகிறது. இருப்பினும், உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியா தற்போது
பெரும்பாலான சிப்களை சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. சிங்கப்பூர், தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற நாடுகளும் இந்தியாவுக்கு
சிப்களை ஏற்றுமதி செய்கின்றன.
மாநிலங்களவையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
ராஜீவ் சந்திரசேகர் அளித்த தரவுகளின்படி, 2020-21ல் ரூ.67,497 கோடியாக இருந்த
செமிகண்டக்டர் சிப்களின் மொத்த இறக்குமதி, 2022-23ல் ரூ.129,703 கோடியாகவும், சீனாவில் இருந்து இறக்குமதி ரூ.24,60 ஆகவும்
உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் ரூ.37,681 ஆக இருந்தது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசு நடவடிக்கை
எடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாக, மொத்தம் ரூ.76,000 கோடி
நிதி முதலீட்டுடன் 2021 இல்
இந்தியாவின் செமிகண்டக்டர் மிஷன் அறிவிக்கப்பட்டது. குறை மின்
கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் பிஎல்ஐ
திட்டம் மற்றும் குறைக்கடத்தி வடிவமைப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டுத் தொழிலை மேம்படுத்துவதற்கான
டிஎல்ஐ திட்டம் ஆகியவை இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்றும் முயற்சியாகும்.
இந்த திட்டங்கள் இந்தியாவை 'சிப் டேக்கரில் இருந்து சிப் மேக்கராக' மாற்றும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில்
ஒன்றான டாடா குழுமம், குறை
மின் கடத்தி தொழில்நுட்பத்தை நம்பியிருக்கும் பல்வேறு தொழில்களில்
முன்னிலையில் உள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா பவர் போன்ற குழுமத்தில்
உள்ள நிறுவனங்கள், செயல்திறனை
மேம்படுத்துவதற்காக செமிகண்டக்டர் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் தங்களை தீவிரமாக
இணைத்து வருகின்றன.
வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சேவைகளில்
உலகளாவிய முன்னணி நிறுவனமாக விளங்கும்
Tata Elxsi மற்றும் ஜப்பானிய
செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனமான Renesas Electronics, மின்சார வாகனங்களுக்கான இலக்கு தீர்வுகளை உருவாக்க 2022 ஆம்
ஆண்டில், பெங்களூரில் ஒத்துழைப்பு உடன்படிக்கையை அறிவித்தன. அதேபோல், முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ, இந்தியாவின் குறை மின் கடத்தி
நுகர்வு வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றொரு பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை
நிறுவனமான இன்ஃபோசிஸ், இந்தியாவின்
குறை மின் கடத்தி தேவைக்கு தீவிரமாக பங்களித்து வருகிறது.
செமிகண்டக்டர் வடிவமைப்பில் தீவிரமாக
ஈடுபட்டுள்ள Intel, Qualcomm, Samsung மற்றும்
NVIDIA போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன், Tata Consultancy Services, Infosys, Wipro மற்றும் HCL Technologies போன்ற உள்நாட்டு நிறுவனங்கள், இணைந்து
மனிதவளத்தை பகிர்வதன் மூலம் நாட்டுக்கு உதவுகின்றன. உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுக்கு
இடையிலான ஒத்துழைப்பு, அரசாங்கத்தின்
ஆதரவான கொள்கைகளுடன் இணைந்து, குறைக்கடத்திகள் உலகில் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழி வகுக்கும் என்று ”சஞ்சய் குப்தா கூறினார். இந்தியாவின் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான
தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகளாவிய குறை மின் கடத்தி உற்பத்தி துறையில் நாடு ஒரு
முக்கிய தளத்தை எட்டும் என்பது உறுதி.
0 Comments:
Post a Comment