ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் த வே”


குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்.. கடவுள்களின் விழாவாக கொண்டாடப்படும் பண்டிகைகள் என்றால் இயல்பாகவே குழதைகளும் குதூகலமாகை விடுவார்கள். அப்படி குழந்தைகள் குதூகலமாகும் ஒரு பண்டிகைதான் கிறிஸ்துமஸ்.. கிறிஸ்துமஸ் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் கிறிஸ்துமஸ் தாத்தாதான். 


மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா இன்றைக்கு உலகெங்கும் பரவி அவருக்கே உரித்தான சிவப்பு உடையில் வெண்தாடி, கண்ணாடி சகிதமாக வலம் வருகிறார். கிறிஸ்மஸ் தாத்தா இல்லாமல் இன்று எங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை என்ற அளவுக்கு கிறிஸ்மஸ் தாத்தாவும், கிறிஸ்துமஸ்சும் ஐக்கியப்பட்டுப் போனது. 

கிறிஸ்மஸ் தாத்தா தோன்றிய விதம் குறித்து அலசினால் அவருக்கும்  ஒரு பின்னனி உண்டு என்பதை அறியலாம்! உண்மையில் புனித நிக்கோலஸ் தான் சாண்ட்டகிளாஸ் என்ற கிறிஸ்மஸ் தாத்தா  உருவாகக் காரணம் என்று சொல்லவேண்டும்.



கிறிஸ்துமஸ் தாத்தா என்றால் ஏன் குழந்தைகள் மிகவும் உற்சாகம் அடைகிறார்கள்.. தெரியுமா.. குட்டையான, குண்டான உருவம், வெண்மையான தாடி, சிவப்பு வெல்வெட் உடை, சர்க்கஸ் கோமாளி அணிவது போன்ற ஒரு குல்லா, முதுகில் தொங்குகின்ற ஒரு நீண்ட பையில் பரிசுகள் சுமந்தபடி வந்து குழந்திகளுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். இதனால்தான் குழந்தைகளுக்கு எப்போதும் பிடித்தமான தாத்தாவாகிப் போனார் கிறிஸ்துமஸ் தாத்தா அப்படிக் குழந்தைகள் விரும்பும் தாத்தாவான சாண்டா கிளாஸ் பெங்குயின்கள் வாழும் வட துருவத்தில் வசிப்பதாகவும், எட்டுக் கலைமான்களால் இழுத்துச் செல்லப்படும் பனி சறுக்கு வண்டியை ஓட்டியபடி வானில் பறந்து வருபவர் என்றும் நம்பப்படுகிறது. இவரது வண்டியில சின்னஞ்சிறு கிங்கிணி மணிகள் கட்டப்பட்டிருக்கும். அந்த மணியின் ஓசைக்கு ஏற்ப ‘ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் த வே” என்ற குழந்தை பாடல் கேட்கவே இதமாக இருக்கும். இந்தப் பாடல் உருவாகிச் சுமார் 500 வருடங்கள் ஆகிவிட்டன 



பல சிறப்புகளுக்குரிய இந்த கிறிஸ்துமஸ் தாத்தா துருக்கி நாட்டில் மைரா என்ற ஊரில் கி.பி. 4-ம் நூற்றாண்டில் ஒரு பணக்கார வீட்டில் பிறந்தவர். அவர் உண்மையான பெயர் நிக்கோலஸ். இயேசுவின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவர் வளர்ந்து பெரியவர் ஆனதும் கிறிஸ்தவப் பாதிரியாராக மாறினார். ரொம்ப இரக்கக் குணம் கொண்டவர்.

குழந்தைகள் என்றால் அவருக்கு உயிர். நிக்கோலஸைச் சுற்றி எப்போதும் குழந்தைகள் கூட்டமாக இருப்பார்கள். ஏன் தெரியுமா? குழந்தைகளுக்கு விதவிதமாகத் தீனி, பொம்மைகளை அவர் பரிசாகக் கொடுத்துக்கொண்டே இருப்பார். இதற்காக அவரோட அப்பா, அம்மா விட்டுப்போன சொத்துகளைக்கூட விற்றுச் செலவழித்திருக்கிறார். குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களுடன் சேர்ந்து ஆடி பாடவும் செய்வார்.



எப்போதும் கிறிஸ்துமஸ் விழாவைக் குழந்தைகளோடுதான் கொண்டாடுவார். அதனால் அவரை எல்லாரும் ‘ஃபாதர் கிறிஸ்துமஸ்’என்று அப்போது அழைத்தார்களாம். அவரோட பிறந்த நாளைச் சிறப்பிக்கும் விதமாக கிறிஸ்துமஸ் தாத்தா போல வேஷம் போடும் பழக்கம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. கிறிஸ்துமஸ் முதல்நாள் இரவு, குழந்தைகள் தூங்கின பிறகு கிறிஸ்துமஸ் தாத்தா வந்து, அவர்களுக்குப் பிடித்த பரிசை வீட்டில் வைத்துவிட்டுப் போவார் என்று இப்போதும் நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸ் தாத்தாவை ஒரு தடவை நீங்களும் உங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டுப் பாருங்களேன்.


0 Comments: