கடவுள்கள் இப்போது கோயில்களுக்குள் இல்லை

பக்தகோடிகளே...
இனி கோயில்களில் சென்று
கடவுளர்களை தேடாதீர்கள்..



சட்டப்பேரவையிலிருந்து
வெளியேறும்..எதிர்க்கட்சி
உறுப்பினர்கள் போல்
என்றோ..
கோயில்களை விட்டு
வெளியேறிவிட்டனர் ஆண்டவர்களும்

கற்பக்கிரகத்தில் கற்பழிப்பு..
சிலைகள் கடத்தல்..
ஆகமவிதிகளுக்குளும்
ஆன்மீகவிதிகளுக்குள்ளும் அத்துமீறல்கள்

எல்லாவற்றையும் கண்டுவிட்ட
கடவுள்கள் இப்போது
கோயில்களுக்குள் இல்லை

அரசாங்கங்களின் வசூல்
மையமாக மாறிவிட்ட
கோயிகளுக்கு பக்தர்கள் யாரும்
இனிச் செல்ல வேண்டாம்..!

உங்களின் ஆன்மிக தேடல்
ஏழையின் சிரிப்பில்
குழந்தையின் மகிழ்வில்
சக மனிதனின் சந்தோசத்தில்
இருக்கட்டும்..!

மதம்
யாரும் நட்டுவைத்த
மலை இல்லை...!
உடைத்தெறிய

எவரும் விதை தூவி
முளைத்து வளர்ந்த
மரம் இல்லை..
வெட்டிச் சாய்க்க
அது..!
ஆதியும் அந்தமும்
காண முடியா வானம்..

இடையில் வந்து எள்ளி நகையாடும்
இரவுப் பூச்சிகளுக்குத் தெரியாது..
விடியலின் வெளிச்சத்தில்..
தாம் தொலைந்து போவோம் என்று..!

கத்திக் கொண்டே இருக்கட்டும் அவைகள்
விடியும் வரை காத்திருப்போம் நாம்..
சூரியச் சுடராய்..
ஒளிரும் இறைவன்..
நம் நம்பிக்கையை காப்பான்..!

அதுவரை பக்தர்கள் யாரும்
கோயில்களுக்குச் செல்ல வேண்டாம்.
ஆலயம் மறப்பது
 சாலவும் நன்று

கட+உள்
 உங்களுக்குள்
கடவுள்ககள்

கடவுளை.காணுங்கள்..

கடவுளர்கள் யாரும் இப்போது
கோயில்களுக்குள் இல்லை..!

0 Comments: