சரித்திர எழுத்துக்களில் சாகித்தியமாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்

இந்தியாவுக்கு ஒரு மகாத்மா..!
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
தென் ஆப்பிரிக்காவுக்கு
ஒரு மாமனிதன்..!

நெல்சன் மண்டேலா

கோடான கோடி நட்சத்திரங்களுக்கு நடுவே
ஒரு நிலவு போல்..
பிறப்பதும் இறப்பதுமாய்
சுழன்று கொண்டிருக்கும்
மனித வாழ்க்கையில்..
சில மகாத்மாக்களும்
மாமனிதர்களும்..
தோன்றிவிடுகின்றனர்.!


மறைந்து விடுவது என்பதோ
மாண்டுவிடுவதென்பதோ..
இவர்களுக்கில்லை..!


சீற்றங்களுக்குள் சிக்கி
சில நேரங்களில் இயற்கையே கூட
இறந்து போய்விடுகிறது..!
சுவடுகள் அழிந்து– வெறும்
வெற்றுப்பக்கங்களாய்
புதிய பரிணாம தேடிக்கொள்கிறது..!


எது எப்படி போனாலும்..
சில சரிந்த்திரங்கள் மட்டும்
மறைவதில்லை..!


மண்டேலா…
அப்படி சரித்திர புருஷர்களுள்
ஒருவாராய் நிலைத்துவிட்டவன் நீ

நீ வாழ்ந்த பூமியில்..
புல்லினமாய் பூத்திருந்தாலும்
பெருமைதான்..!


உன் நாட்கள் கடந்த காலம்தான்
என்றாலும்
எதிர்கால தலைமுறைக்கு அது ஒரு
கலங்கரை விளக்கம்


உலக வரலாறு உனைப் போற்ற
சரித்திர எழுத்துக்களில்..
சாகித்தியமாய் வாழ்ந்து கொண்டிருப்பவன் நீ

வாழ்க நீ எம்மான்..!

- கவிஞர். திருமலைசோமு

0 Comments: