என்றும் இனிமை

பொதிகை தொலைக்காட்சியின் என்றும் இனிமை நிகழ்ச்சிக்கான எனது தொகுப்பினை இங்கே உங்கள் ரசனைக்கும் தருகிறேன்..

நேயர்களுக்கு வணக்கம் 
என்றும் இனிமை நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நேயர்களே இன்றைய நிகழ்ச்சியில் அழகான பாடல்கள் அழகழகாக தொகுக்கப்பட்டு. வழங்கப்படுகிறது. நீங்களும் அழகா பார்த்து ரசிக்கலாம்.. வாங்க நிகழ்ச்சிக்கு போகலாம்

கடவுளோட படைப்பில் ஒவ்வொரு மனிதனும் அழகாகவே படைக்கப்பட்டுள்ளான். மனிதனின் பார்வைக்கு பார்வையே அழகு மாறுப்படுகிறது. ஆனால் படைப்பில் அனைத்துமே அழகானது என்றால் அது மிகையில்லை. நாம் எல்லோருமே அழகா இருக்க வேண்டும் அழகை பராமரிக்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டுவோம். அழகை ரசிக்க தெரிந்த எவருமே ரசிகன் தான். ரசனை போற்றுவோம். அழகை ஆராதனை செய்வோம். சரி நேயர்களே படகோட்டி படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பாருங்கள் அழகே ஒரு ராகம் என்கிறது... பார்ப்போமா..


இயற்கையில் எல்லாம் அழகு மனிதர்களுக்கு  அழகு மனதிலிருந்து வெளிப்படுவது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்  அழகு என்பது ஒரு சக்தி. அந்த சக்தி நமக்கு அதிக தன்னம்பிக்கையை தரும். அதுதான் மனதிற்கு உற்சாகத்தையும் அளிக்கும். சரி நேயர்களே இப்போது உற்சாகமான பாடல் பார்ப்போமா பவித்திரா படத்தில் இருந்து ஒளிர்கிறது இந்த அழகு நிலவு
நம்மில் பலர் அழகு என்று சொன்னால் நிறத்தை வைத்து மதிப்பிடூ செய்கின்றனர். அழகு நிறத்தில் இல்லை. அழகாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்களுக்கு சொல்ல விரும்புகிறேன் மென்மையான வார்த்தைகளை பேசங்கள் எப்போதும் முகமலர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்  நல்ல எண்ணங்களை கொண்டிருங்கள்  இவை எல்லாம் இருந்தால் முகம் மிக அழகாக தோன்றும். பின் என்ன உங்க ஊர்ல நீங்க தான் ராஜ குமாரி,ராஜகுமாரன், சரி நேயர்களே இப்போது ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி படத்தில் இருந்து ஒரு பாடல் பார்த்து ரசிப்போமா..!


என்றும் இனிமை நிகழ்ச்சியில் இன்று அழகின் சிரிப்பாய் இனிய ராகங்களின் தொகுப்பாய் இனிமையான பாடல்களை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம். இயற்கையில் அருவி, நதி, பூக்கள், மரம் செடி கொடி என எல்லாவற்றிலும் அழகை காணும் மனிதன் மனத்திலும் அழகு இருக்கிறது. அழகு உள்ளம் கொண்ட மனத்தில் தெய்வீக தன்மையை உணர முடியும். மனத்தின் அழகு என்பது தூய்மையை குறிக்கும். நேயர்களே இப்போது நாம் ரிக்‌ஷாக்காரன் படத்தில் இருந்து ஒரு பாடல் பார்ப்போமா..!


பெரும் பாலும் வெளிப்புற தோற்றத்தை வைத்து நாம் அழகை மதிப்பீடு செய்து விடுகிறோம். அதுமட்டுமே முழுமையன அழகு என்று சொல்லிவிடமுடியாது. வெளிப்புற அழகோடு சேர்த்து பண்பும். பணிவு, கனிவும். ஈகையும், இரக்கமும் சேர்ந்தால்தான் அழகு முழுமை பெறும். பிறை நிலவு அழகுதன் என்றாலும் பவுர்ணமியின் அழகு கண்கொள்ளா காட்சியல்லவா..  தொடரும் பாடல் அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் இருந்து வருகிறது.. பார்ப்போமா..!நேயர்களே அழகின் ஆனந்தமாய் அற்புதமான பாடல்களின் தொகுப்போடு என்றும் இனிமையை ரசித்துக்கொண்டிருக்கிறீர்கள் அழகாக இருக்க சில யோசனைகளும் சொல்லுறேன் கேட்கிறீங்களா.. அகத்தின் அழகுமுகத்தில் தெரியும் அதனால மனத்தை தூய்மைய வச்சுக்கோங்கன்னு சொல்லிட்டேன். இருந்தாலும் ஒரு டிப்ஸ் சொல்றேன் ழுத்த வாழைப்பழத்தை பாலில் கலந்து முகத்தில் பூசுங்கள். முகம் பளப்பளக்கும். பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து  தடவுங்கள். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும். ஒகே வா..! சரி நேயர்களே இப்ப நம்ம பஞ்சவர்ண கிளி படத்தில் இருந்து ஒரு பாடல் பார்ப்போமா..!

முகத்தின் அழகுக்கு வழி சொன்னேன் நம்ம பாதத்தை அழகா வச்சுக்கிறதுக்கும் ஒரு வழியிருக்குங்க..என்ன தெரியுமா. 
தினமும் இரவில் படுக்கப் போவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு  பாதங்களை பத்து நிமிடங்கள் வரை ஊற வையுங்கள். பிறகு பிரஷ்ஷால் சுத்தம் செய்யுங்கள். பாதங்கள் அழகாகும். ஒகே.வா ட்ரை பண்ணி பாருங்களேன். அதுக்கு முன்னாடி இதோ ஒரு அழகு மலர் ஆடும் நடனத்தை பார்த்திடுவோமா..! வைதேகி காத்திருந்தாள் படத்தில் இடம்பெற்றாது இந்த பாடல்.. நீங்க காத்திருக்க வேண்டாம் இப்பவே பார்த்திடலாம்தமிழ் சினிவாவில் நாயகியின் அழகை வர்ணித்து நாயகன் பாடல்கள் ஏராளம் ரசித்திருப்போம் அதில் இது ஒரு புதுமையான பாடல் என்றே சொல்ல வேண்டும். தாய்வீடு படத்தில் ரஜினிகாந்த் நாயை வைத்து அழகிய கொடியே பாரடி என பாடும் இந்த பாடலையும் ரசிக்கலாமா..! 
இந்த உலகின் அழகெல்லாம் மனிதர்கள் அனுபவிக்கவே படைக்கப்பட்டது என்றால் அது மிகையில்லை. வாழும் ஒரு வாழ்க்கை அனுபவிப்பதற்கே என்ற கொள்கையை விளக்கும் இந்த பாடல் அனுபவி ராஜா அனுபவி படத்தில் இடம்பெற்றது. நாகேஸ் அவர்கள் இந்த பாடலில் தனக்கே உரித்தான பாணியில் நடித்து கலக்கி இருப்பார் முத்துராமன் அவர்களும் நாகேஸும் இணைந்து நாயகிகளை கிண்டல் செய்வது போல் அமைந்த பாடல் இதோ நேயர்களே உங்களுக்காக..1கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு கன்னத்தில் குழி அழகு கார் கூந்தல் பெண் அழகு என்று அழகுக்கு இலக்கணம் படைத்த கவிஞர் நிலவுக்கு கரை அழகு பறவைக்கு சிறகழகு ஔவைக்கு கூன் அழகு அன்னைக்கு சேய் அழகு என்றார். ஆம் நேயர்களே அன்புக்கரங்களுக்கு கொடுப்பது தானே அழகு.. இதோ அன்புக்கரங்கள் படத்தில் இருந்து ஒரு அழகான பாடலை நாங்கள் தருகிறோம்.. வாங்க பார்த்து ரசிக்கலாம்.நேயர்கள் இதுவரை என்றும் இனிமை நிகழ்ச்சியில் அழகு போற்றும் அழகான பாடல்களை பார்த்து ரசித்தீர்கள் மீண்டும் இதுபோல் மற்றும் ஒரு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை வணக்கம் நேயர்களே
0 Comments: