ரஷ்ய-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா




70 ஆண்டுகளுக்கு முன்பு கொரியப் போரின் போது, இந்தியா ஒரு தனித்துவமான அமைதி முன் முயற்சி எடுத்து அதில் வெற்றியும்s பெற்றது. அதேபோல் தற்போது, ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 18 மாதங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர சமீபத்தில் நடந்த அமைதிக் கூட்டங்களில் இந்தியா மிக முக்கியமான இடத்தில் உள்ளது.

உக்ரைன் பிரச்சினை தொடங்கியதிலிருந்தே, எந்தவித அமைதி பேச்சு நடவடிக்கைக்கும் உதவ இந்தியா தயாராக உள்ளதாகவும்  உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தையும் தூதரக அணுகுமுறையும் மிகவும் அவசியம் என்பதையும் இந்தியா கூறி வருகிறது. கடந்த வார இறுதியில் ஜெட்டாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை, அதற்கு முன், ஜூன் மாதம் கோபன்ஹேகனில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களிலும் இந்தியா கலந்து கொண்டது.

வெளியுறவுச் செயலருக்குப் பிறகு சிவில் சேவையில் நாட்டின் இரண்டாவது மிக முக்கிய தூதரான சஞ்சய் வர்மா, இந்த விவாதங்களில் கலந்து கொண்டார். கோபன்ஹேகனில் அவரது வருகை இரகசியமாக இருந்த நிலையில் பின்னர் ஊடகங்களில் கசிந்தது . கோபன்ஹேகன் அமைதி மாநாட்டிற்கு ஒரு பதினைந்து நாட்களுக்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்திடம் பேசினார், அது ஜெட்டாவில் நடைபெற்ற கூட்டத்திற்கு வழிவகுத்தது. பட்டத்து இளவரசரும் பிரதமர் நரேந்திர மோடியும் அடுத்த மாதம் புது தில்லியில் நடைபெறவுள்ள G20 உச்சி மாநாட்டில் சந்திக்கும் போது உக்ரைனில் அமைதி குறித்து மீண்டும் விவாதிப்பார்கள் என தெரிகிறது.

இந்தியா தனது நடுநிலையான நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. மாறாக, "உக்ரேனில் நடந்து வரும் மனிதாபிமான நெருக்கடி பற்றிய தீவிர அக்கறையை வெளிப்படுத்துவதில் மட்டுமே பிரதமர் மோடி மற்றும் நோர்டிக் தலைவர்களுக்கு இடையே உடன்பாடு இருந்தது. அவர்கள் உக்ரைனில் பொதுமக்கள் இறப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டித்தனர்.

கோபன்ஹேகன் அமைதி மாநாட்டில் வர்மாவின் ஆரம்ப வருகையிலிருந்தும், ஜெட்டா பேச்சு வார்த்தையின் அடுத்த கட்ட நிலை அதன் பிரதிநிதித்துவத்தை டோவல் நிலைக்கு உயர்த்துவதற்கான இந்திய முடிவும் தெளிவாக இருந்தது. அதன்படி  சவுதி அரேபியாவில் அண்மையில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து ஆலோசிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஜெட்டா சென்றார். ஜெட்டா விமான நிலையத்தில் அஜித் தோவலை சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர் சுஹெல் கான் மற்றும் கான்சல் ஜெனரல் முகமது ஷாஹித் ஆலம் ஆகியோர் வரவேற்றனர்.

உக்ரைனின் அமைதித் திட்டம் ரஷ்ய துருப்புக்களை திரும்பப் பெற அழைப்பு விடுக்கிறது; கைதிகள் விடுதலை; அணு பாதுகாப்பு, உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்கான உத்தரவாதங்கள்; உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டின் மறுசீரமைப்பு; மற்றும் ரஷ்யா போர் அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும், உக்ரேனிலிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்து பிரதேசங்களையும் திருப்பிக் கொடுக்க வேண்டும். மேலும் போர் இழப்புகளுக்கான நஷ்டஈடு செலுத்த வேண்டும். என உக்ரைன் முன்வைத்த இந்த திட்டத்தை ரஷ்யா நிராகரித்தது.

இந்தியா பிரேசில், தென்னாப்பிரிக்கா, சிலி, எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, மெக்சிகோ, போலந்து, பிரிட்டன் அமெரிக்கா மற்றும் ஜாம்பியா உள்பட  30 நாடுகள் ஜெட்டா உச்சிமாநாட்டிற்கு அழைக்கப்பட்டன சவூதி அரேபியா  ஏற்பாடு செய்த இந்த உச்சிமாநாட்டில் 30 நாடுகள் பங்கேற்போதிலும் ரஷ்யா பங்கேற்கவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவனும் மற்றவர்களுடன் பங்கேற்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 


0 Comments: